பண விடு தூது - பேராசிரியர் க.ஆ.திருஞானசம்பந்தம்தமிழக இலக்கிய வரலாற்றில் 96 வகைப் பிரபந்தங்கள் அடங்கும். இச் சிற்றிலக்கிய வரிசையில் பண விடு தூது நூல்கள், நொண்டி நாடகங்கள், குறவஞ்சிநூல்களும் அடக்கம்.இதில் பண விடு தூது நூல் என்பது, பணம் வேண்டி புலவர்கள் பாடிய பாடல்களாகும். தமிழின் சொல் வளத்துடன், இலக்கிய நயத்துடன் பாடப்பட்டுள்ள இந்தப்பாடல்களில், கி.பி. 17, 18ம் நூற்றாண்டு கால கட்டத்தில், தமிழ்நாட்டில் வழக்கில் இருந்த நாணயங்களின் மரபுப் பெயர்களையும், அவற்றை வெளியிட்டமணியக்காரர்களுடைய பெயர்களையும் தெரிந்து கொள்ள முடிகிறது.புலவர் வேங்கடேசேந்திர வள்ளல் என்பார் எழுதிய பண விடு தூது நூலில் அவரது காலத்தில் வழக்கில் இருந்த காசுகளை அழகுத் தமிழில் அடுக்கியுள்ளார்.இதோ அந்தப் பாடல்:பல்லங்கிக் காசு, சம்பங்கிக் காசுபுல்லவட்டக் காசு, புலுக்காசுசந்தமிக் காசு, சுலுத்தான் காசுஆளிட்டான் காசு, வராகன்புண்ணிய வராகன், சென்ன பட்டணத்தான் வராகன்சீவராயன் வராகன், முகம்மது கான் வராகன்நசானி வாரகன், சீரங்கராயன் வராகன்குதிரைக் குளம்பன், கொங்கு முளைகுணுங்கலூர் வெட்டு, அழகாத்திரி வெட்டுதூத்துக்குடியான் வெட்டு, சுழில்லா வெட்டுபுதுவெட்டு, சோழியன் வெட்டுஇராமச்சந்திரன் வெட்டு, எம்பெருமான் வெட்டுசிகாபதியான் வெட்டு, வாழ்குருகன் வெட்டுஇராமையன் வெட்டு, கொப்பரை வெட்டுகுறுநண்டுக்கால் வெட்டு, மத்தகிரி கண்டிராயன் திருபூச்சைநாயக்கன் பணம், மூர்த்திசெட்டி வெட்டுமயிலாப்பூர் வெட்டு, வீரராயன் பணம்கிச்சம்மாள் வெட்டு, நஞ்சய்யன் வெட்டுவிசுவநாதசெட்டி வெட்டு, சின்னராவுத்தன் வெட்டுகோபால சக்கரம், உழுந்தூர்ச் சக்கரம்திருவையாற்றுச் சக்கரம், திருச்சிராப்பள்ளி சிறு சக்கரம்வல்லதுட்டு, துக்காணிகொட்டு மின்னல், மாற்றுக் குறைச்சல்வெந்துருகல், கோழி விழுங்கல்இரும்பூறல், புதுமங்கல்குடியான் செப்பாடல்புள்ளறுதல், வெள்ளியிற் பொன்பூச்சுதேய்ச்ச உரை, முழு செம்புஓசைப் பணம்,எனப் பாரில் வழங்கித் தெரிசிக்கும் கோலம்(வடிவம்) பல எடுத்துக் கோவே!
தமிழக இலக்கிய வரலாற்றில் 96 வகைப் பிரபந்தங்கள் அடங்கும். இச் சிற்றிலக்கிய வரிசையில் பண விடு தூது நூல்கள், நொண்டி நாடகங்கள், குறவஞ்சிநூல்களும் அடக்கம்.
இதில் பண விடு தூது நூல் என்பது, பணம் வேண்டி புலவர்கள் பாடிய பாடல்களாகும். தமிழின் சொல் வளத்துடன், இலக்கிய நயத்துடன் பாடப்பட்டுள்ள இந்தப்பாடல்களில், கி.பி. 17, 18ம் நூற்றாண்டு கால கட்டத்தில், தமிழ்நாட்டில் வழக்கில் இருந்த நாணயங்களின் மரபுப் பெயர்களையும், அவற்றை வெளியிட்டமணியக்காரர்களுடைய பெயர்களையும் தெரிந்து கொள்ள முடிகிறது.
புலவர் வேங்கடேசேந்திர வள்ளல் என்பார் எழுதிய பண விடு தூது நூலில் அவரது காலத்தில் வழக்கில் இருந்த காசுகளை அழகுத் தமிழில் அடுக்கியுள்ளார்.
இதோ அந்தப் பாடல்:
பல்லங்கிக் காசு, சம்பங்கிக் காசு
புல்லவட்டக் காசு, புலுக்காசு
சந்தமிக் காசு, சுலுத்தான் காசு
ஆளிட்டான் காசு, வராகன்
புண்ணிய வராகன், சென்ன பட்டணத்தான் வராகன்
சீவராயன் வராகன், முகம்மது கான் வராகன்
நசானி வாரகன், சீரங்கராயன் வராகன்
குதிரைக் குளம்பன், கொங்கு முளை
குணுங்கலூர் வெட்டு, அழகாத்திரி வெட்டு
தூத்துக்குடியான் வெட்டு, சுழில்லா வெட்டு
புதுவெட்டு, சோழியன் வெட்டு
இராமச்சந்திரன் வெட்டு, எம்பெருமான் வெட்டு
சிகாபதியான் வெட்டு, வாழ்குருகன் வெட்டு
இராமையன் வெட்டு, கொப்பரை வெட்டு
குறுநண்டுக்கால் வெட்டு, மத்தகிரி கண்டிராயன் திரு
பூச்சைநாயக்கன் பணம், மூர்த்திசெட்டி வெட்டு
மயிலாப்பூர் வெட்டு, வீரராயன் பணம்
கிச்சம்மாள் வெட்டு, நஞ்சய்யன் வெட்டு
விசுவநாதசெட்டி வெட்டு, சின்னராவுத்தன் வெட்டு
கோபால சக்கரம், உழுந்தூர்ச் சக்கரம்
திருவையாற்றுச் சக்கரம், திருச்சிராப்பள்ளி சிறு சக்கரம்
வல்லதுட்டு, துக்காணி
கொட்டு மின்னல், மாற்றுக் குறைச்சல்
வெந்துருகல், கோழி விழுங்கல்
இரும்பூறல், புதுமங்கல்குடியான் செப்பாடல்
புள்ளறுதல், வெள்ளியிற் பொன்பூச்சு
தேய்ச்ச உரை, முழு செம்பு
ஓசைப் பணம்,
எனப் பாரில் வழங்கித் தெரிசிக்கும் கோலம்
(வடிவம்) பல எடுத்துக் கோவே!
பணம் என்னும் உன்னைப் படைக்காத சென்மம்
பிணம் என்பர் கண்டாய் பெரியோய்!
இந்தப் பாட்டுக்குப் பின்னணி என்ன தெரியுமா? நெல்லையில் நெல்லேசருக்கும், காந்திமதி தேவிக்கும் நிகழ்ந்த திருக்கல்யாண உற்சவத்தில், தட்டேந்திநின்ற குங்குமப் பூங்கோதையைக் கண்டு, கட்டுண்ட புலவர், காமவயப்படுகிறார்.
பூங்கோதையிடம் தனது காதலைச் சொல்ல, தான் பெற்ற திரவியத்தை விளித்து, அழைத்து வருமாறு தூது விடுக்கிறார். அப்போது பல்வகை பணம் குறித்துஅவர் விவரிக்கிறார்.
பணத்தின் மரபுப் பெயர்கள், அந்தப் பணத்தை புழக்கத்தில் விட்டவர் பெயர் உள்ளிட்ட தகவல்கள் இதில் பொதிந்து கிடக்கின்றன.
- பேராசிரியர் க.ஆ.திருஞானசம்பந்தம்
நன்றி: பழங்காசு
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications