துபாய் தமிழர்களின் முப்பெரும் விழா
துபாய்: துபாய் அமீரகத் தமிழர்கள் அமைப்பு முப்பெரும் விழாவினைக் கொண்டாடுகிறது.
உழைப்போம்! உயர்வோம்!! உதவுவோம்!!! எனும் உன்னத நோக்கத்துடன் செயல்பட்டு வரும் துபாய் அமீரகத் தமிழர்கள் அமைப்பு சமுதாயப் பணியில் தனது ஆறாம் வயதினை பூர்த்தி செய்து ஏழாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
அதனை நினைவுறுத்தும் வகையில் அமீரகத் தமிழர்கள் அமைப்பின் 7வது ஆண்டு துவக்க விழாவும், பவள விழா கண்ட தமிழர் தலைவருக்கு பாராட்டு விழாவும், அமீரகத்தில் சிறந்த சமூக சேவகர்களுக்கான விருது பெற்றவர்களை கெளரவிக்கும் வண்ணமாகவும் வருகிற பிப்ரவரி 28ம் தேதி வியாழக்கிழமை மாலை துபாய் இந்தியன் ஹை ஸ்கூல் வளாகத்தில் நடைபெறுகிறது.
அங்குள்ள ஷேக் ரசீத் உள்ளரங்கில் விழா நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளதாக துபாய் அமீரகத் தமிழர்கள் அமைப்பின் தலைவர் அமுதரசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பின் பக்கீத் நிறுவன தலைவர் ஷேக் சுல்த்தான் அப்துல்லாஹ் பக்கீத் அல் மத்ருஷி, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, நடிகர் சத்யராஜ், அன்பு மருத்துவமனை மற்றும் கல்வி சார் நிறுவனங்களின் நிறுவனர் குடந்தை அன்பழகன், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வீரசேகரன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இவர்களுடன் கலைஞர் டிவி புகழ் "எல்லாமே சிரிப்புதான்" குழுவினர்களும் பங்கேற்கவுள்ளனர்.
விழாவில் ஆண்டுமலர் வெளியீடு, அங்கத்தினர்கள் பங்கேற்கும் சிலம்பம் மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
நிகழ்ச்சி குறித்த மேலதிக விபரங்கள் பெற 050 4748490 எனும் தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொண்டு விபரம் பெறலாம் என்று அமீரகத் தமிழர்கள் அமைப்பின் செய்திப்பிரிவு தெரிவித்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications