செங்கோட்டை குளத்தில் முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு

Subscribe to Oneindia Tamil

செங்கோட்டை: சீரமைக்கப்பட்டு வரும் குளத்தில் 50க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டது.

கேரள எல்லையான புளியரை அருகே உள்ளது குறவன்பத்து கிராமம். இங்குள்ள குளத்தை தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் செலவில் ஆழப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

தொழிலாளர்கள் இன்று காலை குளத்தை ஆழப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போடு சுமார் இரண்டரை அடி பள்ளத்தில் முதுமக்கள் தாழிகள் இருப்பதை பார்த்து ஆச்சர்யமடைந்தனர். தொடர்ந்து தோண்டியபோது சுமார் 50க்கும் மேற்பட்ட தாழிகள் ஜோடி ஜோடியாக புதைக்கப்பட்டிருந்தன.

தகவறிந்த கிராம மக்கள் தாழகளை ஆர்வமுடன் பார்த்தனர். இதுகுறித்து தொல்பொருள் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+