கன்னடர் கண்ணீர் துடைத்தவர் கலைஞர்- வாலி
சென்னையில் நேற்று நடந்த தமிழ்த் திரையுலகினரின் உண்ணாவிரதத்தில் கடைசியாக வந்து கலந்து கொண்டார் கவிஞர் வாலி. தனது மோசமான உடல் நிலையையும் பொருட்படுத்தாமல் உதவியாளர்கள் துணையுடன் வந்த வாலி உருக்கமாக பேசினார்.
வாலி பேசுகையில், நடிகர், நடிகைகள் நல்ல மனிதர்கள் என்பதை இப்போது நிரூபித்துள்ளனர். நமது நாட்டில் பல இனங்கள் உள்ளன, மொழிகள் உள்ளன. ஆனாலும் வேற்றுமையிலும் ஒற்றுமை காண்கிறோம். ஆனால் தற்போது இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் நிலை உருவாகியுள்ளது.
இப்படிப்பட்ட நிலையில் பாரத மாதாவின் புத்திரர்கள் நாம் என்று நானும், வைரமுத்துவும் எழுதுவதில் என்ன பலன் இருக்க முடியும்.
முதல்வர் கருணாநிதி கன்னர்களைப் பற்றி தவறுதலாக பேசியுள்ளார் என்று கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா பேசியுள்ளார். இது தமிழர்களைக் காயப்படுத்துவதாக உள்ளது.
எம்.ஜி.ஆர். + சிவாஜி = ராஜ்குமார் என்று கூறப்படும் கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரை வீரப்பன் கடத்திச் சென்றபோது அவரை மீட்டு கன்னர்களின் கண்ணீரைத் துடைத்தவர் கலைஞர். அப்போது கன்னட மக்களின் கண்ணீரைத் துடைத்தோம். ஆனால் இப்போது அவர்கள் நமக்கு தண்ணீர் தர மறுக்கிறார்கள். இது வேதனை தருகிறது என்றார் வாலி.
நடிகை மனோரமா பேசுகையில், புழுவைக் கம்பால் குத்திக் கொண்டே இருந்தால் அது ஒரு கட்டத்தில் அந்தக் கம்பை கடிக்க ஆரம்பிக்கும். அதற்கு கூட அந்தளவுக்கு உணர்வு இருக்கிறது. அன்று காவிரியின் குறுக்கே கல்லணை கட்டி தண்ணீர் கொடுத்தான் கரிகால் சோழன். இன்று இவர்கள் யார் நமக்கு தண்ணீர் இல்லை என்று சொல்வதற்கு.
ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை முதல்வர் கலைஞர் நிச்சயம் நிறைவேற்றுவார். அவர் நிச்சயமாக இதைச் செய்வார். அவர் தமிழன். அவர் நினைத்தால் எதையும் நிச்சயம் செய்து முடிப்பார்.
நதிகளை தேசியமயமாக்கும் திட்டத்தைக் கொண்டு வந்தால் ரூ. 1 கோடி தருவதாக தம்பி ரஜினிகாந்த் முன்பு கூறியிருந்தார். அந்தத் திட்டம் வரும் பொன்னாள் வெகு தூரம் இல்லை. அதைப் பார்த்து விட்டுத்தான் நானும் சாவேன் என்றார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!













Click it and Unblock the Notifications