அரசாணைகளில் இனி திருவள்ளுவர் ஆண்டு-அரசு உத்தரவு

இதுகுறித்து ஒரு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.அதில், தமிழ்நாடு தமிழ்ப் புத்தாண்டு சட்டம், 2008 சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் தை மாதத்தின் முதல் நாளில் இருந்து தமிழ்ப் புத்தாண்டு தொடங்கும் என்றும், மார்கழி மாதத்தின் கடைசி நாளில் தமிழ் ஆண்டு முடிவடையும் என்றும் கூறப்பட்டுள்ளது.
எனவே இனிமேல் அரசாணைகள், தமிழ்நாடு அரசிதழ், அரசுக் கடிதங்கள் மற்றும் பல வெளியீடுகளில் சர்வஜித் என்ற தமிழ் ஆண்டை நீக்க வேண்டும். பிரபவ முதல் அட்சய வரை உள்ள 60 ஆண்டுகளின் பெயர்களை பயன்படுத்த வேண்டும்.
கிறிஸ்துவ ஆண்டுக்கு நிகராக தமிழ் மாதங்கள், நாள் மற்றும் திருவள்ளுவர் ஆண்டு ஆகியவற்றையே பயன்படுத்த வேண்டும்.
உதாரணமாக 2008 பிப்ரவரி 9ம் தேதியை அரசாணையில், திருவள்ளுவர் ஆண்டு, 2039, பங்குனி 27ம் தேதி என குறிப்பிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளுவர் ஆண்டு என்பது தற்போது உள்ள ஆங்கில ஆண்டுடன் 31 ஆண்டுளை கூட்டிக் கொள்ள வேண்டும். அந்த ஆண்டுதான் திருவள்ளுவர் ஆண்டு என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications