குடியரசு குடும்பத்தினருக்கு வீடுகள் கட்டித் தரும் வைகோ
Subscribe to Oneindia Tamil
மறைந்த கவிஞர் குடியரசு குடும்பத்தினருக்கு ரூ. 50 லட்சம் செலவில் 8 வீடுகள் கட்டும் பணியை மதிமுக, பொதுச்செயலர் வைகோ துவக்கி வைத்தார்.
மதிமுகவின் துணைப் பொதுச் செயலாளராக இருந்தவர் கவிஞர் குடியரசு. அவரது குடும்பத்தினருக்காக சென்னை அசோக் நகரில் வீடு கட்டும் பணியை துவக்கி வைத்து வைகோ பேசும்கையில்,
என் மீது கொலை பழி சுமத்திய போது, உன் மீதா பழி என்று என்னை கட்டிப் பிடித்து அழுதார். அவர் இறந்த அன்று அவரது குடும்பத்தினருக்கு வீடு கட்டித் தர வேண்டும் என்று முடிவு செய்தேன்.
அதன் அடிப்படையில் அவரின் குடும்பத்தினருக்கு எட்டு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படுகிறது. வீடுகள் திறப்பு விழா பிரம்மாண்டமான நிகழ்ச்சியாக நடக்கும் என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications