தமிழறிஞர்களுக்கு ஆதித்தனார் இலக்கியப் பரிசு
அமரர் சி.பா. ஆதித்தனார் நினைவாக ஆண்டுதோறும் வழங்கப்படும் இலக்கியப் பரிசுக்கு விண்ணப்பிக்கலாம் என கோரப்பட்டுள்ளது.
தமிழுக்கு அருந்தொண்டாற்றி வரும் மூத்த தமிழ் அறிஞர் ஒருவருக்கு ரூ.1.5 லட்சமும், சிறந்த இலக்கியத்துக்கு ரூ. 1 லட்சமும் இந்த பரிசு பிரித்து வழங்கப்படும்.
ஆதித்தனார் நினைவு நாள் வருடந்தோறும் மே 24ம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனையொட்டி ஆண்டுதோறும் இலக்கியப் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
சென்ற ஆண்டு டாக்டர் வ.அய். சுப்பிரமணியத்துக்கு மூத்த தமிழ் அறிஞருக்கான ரூ.1.5 லட்சம் பொற்கிழி வழங்கப்பட்டது.
காக்கைச் சோறு என்ற நூலை எழுதிய கவிக்கோ அப்துல் ரகுமானுக்கு சிறந்த இலக்கியத்துக்காக ரூ.1 லட்சம் வழங்கப்பட்டது.
ஆதித்தனாரின் பிறந்த நாளான செப்டம்பர் 27ம் தேதி நடக்கும் விழாவில் இவ்வாண்டுக்கான பரிசு வழங்கப்படும்.
கதை, கவிதை, நாடகம், கட்டுரை என்று எல்லா துறைகளையும் சேர்ந்த நூல்களையும் பரிசுக்கு அனுப்பி வைக்கலாம்.
கடந்த 3 ஆண்டுகளுக்குள் முதல் பதிப்பாக வெளிவந்த நூலாக இருக்க வேண்டும். 192 பக்கத்துக்கு குறையக்கூடாது. ஆசிரியர் அல்லது பதிப்பாளர் அனுப்பி வைக்கலாம்.
ஜுன் 30ம் தேதிக்குள் விண்ணப்பங்கள், நூல்களுடன் வந்து சேர வேண்டும். தேர்வு குழு பரிசுக்குரிய தேர்வு நூலை தேர்ந்தெடுக்கும்.
பரிசுக்குரிய மூத்த தமிழ் அறிஞர் பெயரை யார் வேண்டுமானாலும் சிபாரிசு செய்து அனுப்பி வைக்கலாம். உடன் அவரது பணிகளையும் எழுதி அனுப்ப வேண்டும்.
மேலும் விபரம் பெற:
ஆதித்தனார் இலக்கியப் பரிசு,
தினத்தந்தி,
சென்னை 600 007
என்ற முகவரியைத் தொடர்பு கொண்டு பெறலாம்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications