For Daily Alerts
Just In
பெங்களூர் தமிழ்ச் சங்கத்தில் யோகா வகுப்பு
பெங்களூர்: தமிழ்ச் சங்கத்தில் யோகா பயிற்சி வகுப்புகள் ஜூலை 1-ம் தேதி துவங்குகின்றன.
இது தொடர்பாக பெங்களூர்த் தமிழ்ச் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:
தமிழ்ச் சங்கத்தில் காலை நேர யோகா பயிற்சி வகுப்புகள் ஜூலை 1-ம் தேதி துவங்குகின்றன. ஆண், பெண் இருபாலருக்கும் இந்த யோகா வகுப்புகள் நடத்தப்படும்.
திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 6.30 மணி முதல் காலை 7.30 மணி வரை வகுப்பு நடைபெறும்.
மேலும் விவரங்களுக்கு பெங்களூர் அண்ணாசாமி முதலியார் தெருவில் உள்ள சங்க அலுவலகத்தை 080-25510062 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Story first published: Monday, June 30, 2008, 11:47 [IST]