பிற மொழி வெறுப்பு வேண்டாம்-ஜெயகாந்தன்

தஞ்சையில், தமிழ் பல்கலைக்கழக 28 வது ஆண்டு தொடக்க விழா, அண்ணாத்துரை நூற்றாண்டு விழா, உலகத்தமிழ் சங்க நற்றமிழ் விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.
பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.மாவட்ட கலெக்டர் சண்முகம் அகராதி இயல் என்ற நூலை வெளியிட்டார். முதல் பிரதியை திருச்சி பாரதிசாதன் பல்கலைக்கழக துணை வேந்தர் பொன்னவைக்கோ பெற்றுக் கொண்டார்.
பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டியில் முதல் முன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு எழுத்தாளர் ஜெயகாந்தன் பரிசு வழங்கி பாராட்டினார்.
பின்பு அவர் பேசுகையில், நாம் அனைவரும் தமிழை முதலில் சுத்தமாக பேச வேண்டும். ழ என்ற எழுத்து தமிழ் மொழிக்கு கிடைத்த சிறப்பு.
இதை நாம் அனைவரும் தெளிவாக உச்சரிக்க வேண்டும். நாம் நமது மொழியை காப்பாற்றுகிறோம் என்பதற்காக மற்ற மொழிகள் மீது வெறுப்பு காட்டக் கூடாது.
நம்மை ஆட்சி செய்த மேலை நாட்டவரின் உடையை அணிந்து கொண்டு தமிழ் மொழியை காப்பாற்ற வேண்டும் என்று கூறுவதில் என்ன பயன் உள்ளது.
நமது மொழியின் பெருமை மற்ற நாடுகளுக்கு செல்ல வேண்டும் என்றால் அனைத்து மொழிகளையும் முதலில் கற்றுக் கொள்ள வேண்டும். மற்ற மொழிகளில் உள்ள சிறப்புகளை தெரிந்து கொண்டால் தான் நமது தாய் மொழி சிறப்பை உணர்ந்து கொள்ள முடியும் என்றார் ஜெயகாந்தன்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications