தேவர் ஆய்வு மையம் மூலம் கருத்தரங்கு
மதுரை: மதுரை காமராஜர் பல்கலைக்கழக பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஆய்வு மையம் மூலம் பல்வேறு கருத்தரங்குகள், நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளதாக துணைவேந்தர் இரா.கற்பக குமாரவேல் தெரிவித்தார்.
அவர் கூறுகையில்,
காமராஜர் பல்கலைக்கழகத்தை சர்வதேச அளவில் புகழ்பெறச் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இங்குள்ள அனைத்துத் துறைகளிலும் பணியாளர்களின் எண்ணிக்கையையும், தரத்தையும் அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறன.
பல்கலைக்கழக பசும்பொன் தேவர் ஆய்வு மையத்தில் காலியாக இருந்த இயக்குநர், உதவி இயக்குநர் பணியிடங்கள் தற்போது நிரப்பப்பட்டுவிட்டன.
இம்மையத்திற்கு தமிழக அரசு அளித்துள்ள ரூ.15 லட்சம் நிதி, வைப்பு நிதியில் வைக்கப்பட்டு தேவர் குறித்த கருத்தரங்கு, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஒவ்வோர் ஆண்டும் இந்த ஆய்வு மையம் மூலம் மூன்று அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் நடத்தப்பட்டு வருகின்றன. பசும்பொன் தேவரும், சமூக நல்லிணக்கமும் என்ற தலைப்பில் கட்டுரைகளைச் சமர்ப்பிக்க பல்கலைக்கழக மற்றும் கல்லூரி ஆசிரியர்களுக்கு அழைப்பு விடுத்து, சிறந்த கட்டுரைக்கு விருதும் சான்றிதழும் வழங்கப்பட உள்ளது.
ஒப்பந்தம்:
இந்தாண்டு கருத்தரங்குகள், தேசிய கருத்தரங்கு, மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை வழங்குவதற்காக ரூ.2 லட்சம் அளிக்க முன்வந்துள்ள தனியார் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஆய்வு மையம் மூலம் அறக்கட்டளைச் சொற்பொழிவுகள், கருத்தரங்குகள் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு தனியார் நிறுவனங்கள் நன்கொடை அளிக்க முன்வந்தால் அவை ஏற்கப்படும்.
பல்கலைக்கழக வளர்ச்சிக்கு வெளிப்படையான நிர்வாகம் அவசியம். அதை தற்போது மேற்கொண்டு வருகிறோம் என்றார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications