பொங்கல் தூத்துக்குடியில் மஞ்சள் விளைச்சல் அமோகம்!
தூத்துக்குடி: பொங்கல் பண்டிகையின்போது பானையில் வைத்துக் கட்டப்படும் மஞ்சள் அமோக விளைச்சலைக் கண்டுள்ளதால் தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையின்போது கரும்பு, மஞ்சள்குலை, பழம் உள்ளிட்டவைகளை வைத்து வழிபாடு நடத்துவது வழக்கம்.
பொங்கல் பண்டிகைக்காக மஞ்சள் தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள சேர்வைக்காரன்மடம், தங்கம்மாள்புரம், சிவத்தையாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆண்டுதோறும் பயிரிடப்பட்டு வருகிறது.
இந்த மஞ்சள் பயிர்கள் அனைத்தும் அறுவடைக்கு தயாராகி வருகிறது. இந்த வாரம் முதல் மஞ்சள் குலைகள் அறுவடை செய்யப்பட்டு சந்தைக்கு வர உள்ளன. பொதுவாக இந்த பகுதிகளில் அறுவடை செய்யப்படும்
மஞ்சள் தூத்துக்குடிக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. அதுமட்டுமின்றி தூத்துக்குடி மஞ்சள் டெல்லி, சென்னைக்கு அனுப்பப்படுகிறது.
இதுகுறித்து ஒரு விவசாயி கூறுகையில், புதுக்கோட்டை வட்டாரத்தில் மஞ்சள் பயிரிடப்படுகிறது. இதற்கான விதை மஞ்சள் ஆலங்குளம் அருகேயுள்ல சிவலூரில் இருந்து வாங்கி வரப்படுகிறது. ரூ.15க்கு வாங்கி இந்த சுற்று வட்டாரத்தில் பயிரிடப்படுகிறது.
தற்போது நல்ல மழை பெய்துள்ளதால் ஒரு ஏக்கருக்கு 10 ஆயிரம் மஞ்சள் குலைகள் விளைச்சல் கிடைக்கும். ஒரு மஞ்சள் குலை உற்பத்திக்கு ரூ.3 செலவாகிறது. இதனால் ரூ.4 முதல் 5 வரை ஒரு மஞ்சள் குலை விற்பனை செய்யப்படும்.
இங்கு விளையும் மஞ்சள் பொங்கல் பண்டிக்கைக்கு விற்பனைக்கு போக மீதம் உள்ள மஞ்சள் குலைகள் அனைத்தும் சென்னை மற்றும் டெல்லிக்கு அனுப்பப்படுகிறது என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications