புழல் சிறையில் சென்னை சங்கமம் - கைதிகள் குஷி
சென்னை: சென்னை புழல் மத்திய சிறையில் சென்னை சங்கமம் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. கைதிகள் விசிலடித்து, குஷியுடன் பார்த்து ரசித்தனர்.
கடந்த 10ம் தேதி தொடங்கிய சென்னை சங்கமம் நிகழ்ச்சிகள் பலத்த வரவேற்புடன் கலக்கலாக நடந்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் நேற்று புழல் மத்திய சிறையி்ல சங்கமம் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இதற்கான ஏற்பாடுகளை சிறைத்துறை டிஐஜி துரைசாமி தலைமையில் அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.
சென்னை சங்கமத்தின் மூளையான கவிஞர் கனிமொழி, தனது கணவர் அரவிந்தனுடன் இதில் கலந்து கொண்டார். கைதிகளுக்கு பழங்கள், புத்தகங்களையும் அவர் பொங்கல் பரிசாக அளித்தார்.
தப்பாட்டம், சென்ட மேளம், கரகாட்டம் உள்ளிட்ட பல்வேறு கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இவற்றை கைதிகள் உற்சாகத்துடன் கண்டு மகிழ்ந்தனர்.
விசிலடித்தும், ஆடிப் பாடியும் உற்சாகமாக கண்டு களித்தனர்.
இதுகுறித்து கனிமொழி கூறுகையில், சென்னை சங்கமம் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சிறையிலும் இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். வெளியில் உள்ளவர்களுக்கும், கைதிகளுக்கும் வித்தியாசம் இல்லை. காரணம், ரசனை அனைவருக்கும் ஒன்றுதான் என்றார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications