இலக்கியா நடராஜன் நூல் வெளியீடு
சிவகங்கை: எழுத்தாளரும் கவிஞருமான இலக்கியா நடராஜன் எழுதிய சிறகுகளால் நடப்பவன், நீ..நான்.. நட்சத்திரங்கள் என்ற இரு கவிதை நூல்களை வெளியிடும் விழா வரும் 24ம் தேதி சிவகங்கையில் நடக்கிறது. கவிஞர் மீரா கலை இலக்கியப் பேரவை சார்பில் இந்நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இதில் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கலந்து கொண்டு, நூல்களை வெளியிட்டு, கவிஞர் மீரா படத்தையும் திறந்து வைக்கிறார்
எம்எல்ஏக்கள் சுந்தரம், கே.ஆர். ராமசாமி, ராம. சுப்புராம், கராத்தே தியாகராஜன் ஆகியோர் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகிப்பார்கள் என தெரிகிறது.
முதல் பிரதியை கவிஞர் வைரமுத்து பெற்று சிறப்புரையாற்றுகிறார். நக்கீரன் ஆசிரியர் கோபால், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி ப. சிதம்பரம், கவிஞர் தமிழச்சி, டெல்லி தமிழ்ச் சங்க செயற்குழு உறுப்பினர் கே.வி.கே. பெருமாள் ஆகியோர் வாழ்த்துரை நிகழ்த்துகின்றனர்.
நூலாசிரியர் இலக்கியா நடராஜன் ஏற்புரையாற்றுகிறார்.












Click it and Unblock the Notifications