முஸ்லீம்கள் யோகா செய்ய இந்தோனேசிய உலமாக்கள் தடை
ஜகார்த்தா: இந்தோனேசியாவில் வசிக்கும் முஸ்லிம் மக்கள் யோகா செய்வது, வேத மந்திரங்களை முழங்குவது, தியானம் செய்வது ஆகியவற்றுக்கு இந்தோனேசிய உலமா கவுன்சில் தடை விதித்துள்ளது.
இந்தோனேசியாவின் முக்கிய மத அமைப்பா உலமா கவுன்சில் சமீபத்தில் புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதில் யோகா முஸ்லீம் மத நம்பிகைகக்கு விரோதமானது என தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், முழுமையான தடையை அவர்கள் விதிக்கவில்லை. இதுகுறித்து உலமா கவுன்சில் எடுத்த முடிவில், இந்தோனேசிய முஸ்லிம்கள் யோகாவை வெறும் உடற்பயிற்சியாக மட்டுமே செய்ய வேண்டும். அதோடு இணைந்து வேத மந்திரங்களை உச்சரிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இப்படி வேத மந்திரங்களை முழங்குவது, தியானம் செய்வது, முஸ்லிம் மத சட்டங்களுக்கு எதிரானது. இதனால் முஸ்லிம் மக்கள் வேறு மதத்தினரின் நம்பிக்கையை பின்பற்ற நேரிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு யோகா ஆசிரியர்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பான்டுங் நகரில் யோகா மையம் நடத்தி வரும் புஜியஸ்ததி சிந்து என்பவர் கூறுகையில், யோகாவுக்கு யாரும் தடை விதிக்கமுடியாது. யோகா செய்பவர்கள் வேறு மத கடவுளை வழிபடுவதாக அவர்கள் நினைக்கிறார்கள். அது தவறு.
அதற்கு அவர்களுக்கு யோகாவை பற்றி தெரியாததே காரணம். அவர்கள் யோகா பயிற்சி மேற்கொண்டு உண்மையை புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
ஜகார்த்தாவில் உள்ள பிகாராம் யோகா மையத்தை சேர்ந்த மோனி சுரியானி என்ற கிறிஸ்தவர் கூறுகையில், சில சமயங்களில் நானும் மந்திரங்களை உபசரித்து வருகிறேன். இதனால் எனது மத நம்பிக்கை குறைந்துவிடாது என்றார்.
ஏற்கனவே மலேசியாவிலும் இதேபோல யோகாவுக்கு முஸ்லீம் மத குருமார்கள் தடை விதித்தது நினைவிருக்கலாம்.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications