குமரியில் திருவள்ளுவர், விவேகானந்தர் ஒளி-ஒலி காட்சி

குமரியில் உள்ள ரூ.2 கோடியே 25 லட்சம் செலவில் திருவள்ளுவர், சுவாமி விவேகானந்தர், பகவதி அம்மன் குறித்து மக்களிடையே அதிக விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அவர்கள் குறித்த சுவரஸ்யமான சம்பவங்களை கொண்ட ஒளி, ஒலி காட்சிக்கூடம் அமைக்கப்பட இருக்கிறது. இதற்கான செலவினை மத்திய, மாநில அரசுகள் இணைந்து ஏற்றுக் கொண்டுள்ளன.
இக்காட்சிகளை நடத்த பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு துறை அருகில் அரங்கம் ஒன்று அமைக்கப்படுகிறது. இதில் சுமார் 500 பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து நிகழ்ச்சிகளை பார்க்கலாம்.
இந்த ஒளி-ஒலி காட்சி தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட மூன்று மொழகளில் நடக்கும். தினமும் மாலை 3 காட்சிகள் நடைபெற இருக்கிறது. இதற்கான கட்டுமான பணி இன்று பூஜையுடன் துவங்கியது.
நிகழ்ச்சியில் இந்திய சுற்றுலா வளர்ச்சி கழக மண்டல பொறியாளர் அய்யாத்துரை, சுற்றுலா அலுவலர் அரிராதாகிருஷ்ணன், பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக மேலாளர் சொர்ண பாண்டியன், துணை மேலாளர் (தொழில்நுட்பம்) வின்ஸ்லிராய், உதவி மேலாளர் ஜோசப், தமிழ்நாடு கடல்சார் வாரிய துறைமுக பாதுகாப்பு அதிகாரி பகவதி பெருமாள் ஆகியோர் பங்கேற்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications