மண்டைக்காட்டில் நள்ளிரவில் ஒடுக்கு பூஜை!
குளச்சல்: மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நேற்று ஒடுக்கு பூஜை நடைபெற்றது.
பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படும் மண்டைக்காடு பகவதிஅம்மன் கோயில் மாசி கொடை விழா கடந்த ஒன்றாம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான ஆறாம் நாள் இரவு வலியபடுக்கை எனப்படும் மஹாபூஜை நடந்தது.
ஒன்பதாம் நாள் விழாவான 9ம் தேதி இரவு பெரிய சங்கர தீவட்டியுடன் அம்மன் வெள்ளி பல்லாக்கில் பவனி வரும் நிகழ்ச்சி நடந்தது. மாசி கொடை விழா துவங்குவதற்கு முன்பே கேரள பெண் பக்தர்கள் இருமுடி கட்டி மண்டைக்காடு வந்து பொங்கலிட்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.
பத்தாம் நாள் விழாவான நேற்று காலை முதலே அம்மனை தரிசிக்க கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் மண்டைக்காட்டில் குவித்தனர். நேற்று அதிகாலை 3.30 மணிக்கு அம்மன் வெள்ளிப் பல்லாக்கில் பவனி வந்தார்.
அடியந்திர பூஜை, குத்தியோட்டம் நிகழ்ச்சி நடந்தது. மாலை 5 மணிக்கு திருநடை திறக்கப்பட்டு, 6.30 மணிக்கு சாயரட்சை தீபாரதனை நடந்தது. இரவு 8 மணிக்கு ஹரி கதை, 9 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லாக்கில் பவனி வருதல், 11 மணிக்கு கர்நாடக சங்கீதம் நடந்தது.
நள்ளிரவு 12 மணிக்கு விரமிருந்த அம்மன் பக்தர்கள் பகவதி அம்மனுக்கென்று விசேஷசமாக தயாரிக்கப்பட்ட உணவு பண்டங்கள், காய்கறிகள், கனி வகைகளை சுத்தமாக மண்பானைகளில் வெள்ளை துணியால் மூடி ஊர்வலமாக பகவதி அம்மன் கோயிலுக்கு கொண்டு சென்றனர். பின்னர் ஓடுக்கு பூஜை நடந்தது.
நேற்று காலை முதல் அதிகாலை சுமார் மூன்று மணி நேரம் வரை மண்டைக்காட்டில் பக்தர்கல் கூட்டம் அலைமோதியது. கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். ரகசிய கேமராக்களும் பொருத்தப்பட்டு அதன் மூலமும் பக்தர்கள் கண்காணிக்கப்பட்டனர்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications