யுஎஸ் குழந்தைகளை விட இந்திய, சீன குழந்தைகள் பிரமாதம்: ஒபாமா
லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்க குழந்தைகளை விட இந்தியா மற்றும் சீன குழந்தைகள் படிப்பதில் அதிக திறமையுடன் இருக்கின்றனர். அவர்களை விட அதிக வசதிகள் இருந்தும் அமெரிக்க குழந்தைகள் படிப்பில் பின்தங்கியுள்ளன என்கிறார் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று நடந்த கூட்டம் ஒன்றில் பங்கேற்ற ஒபாமா பேசுகையி்ல்,
அமெரிக்க குழந்தைகளை விட இந்தியா மற்றும் சீன குழந்தைகள் படிப்பில் திறமையாக இருக்கிறார்கள். இதற்கு பெற்றோர்கள், பள்ளிகூடம் மற்றும் ஆசிரியர்களை குறை சொல்ல முடியாது. அதற்கு காரணம் நீங்கள் தான்.
அமெரிக்க குழந்தைகள் வீட்டுக்கு வந்தவுடன் அவர்கள் வீட்டுப் பாடம் செய்வதில்லை. வீடியோ கேம் விளையாடுவதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.
அதேபோல் அமெரிக்க பெற்றோர்கள் குழந்தைகளின் படிப்பு தொடர்பாக நடக்கும் பெற்றோர், ஆசிரியர் கூட்டத்தில் கலந்து நேரம் ஒதுக்குவதும் கிடையாது. பிள்ளைகளின் அறிவு பசியை தூண்டுவதில் பெற்றோருக்கு அதிக பங்கு இருப்பதை மறந்துவிட்டார்கள்.
இந்தியா மற்றும் சீனாவில் இருக்கும் பள்ளிகூடங்களில் நெரிசல் அதிகம். நமது குழந்தைகளுக்கு கிடைக்கும் கம்ப்யூட்டர் உள்ளிட்ட வசதிகள் அவர்களுக்கு கிடைப்பதில்லை. ஆனாலும், அவர்கள் படிப்பில் நமது குழந்தைகளை விட அருமையாக இருக்கிறார்கள்.
குழந்தைகளின் படிப்பு விஷயத்தை பெற்றோர்கள் முக்கியமானதாக கருத வேண்டும். அமெரிக்க குழந்தைகளின் கல்வி தரத்தை அதிகரிக்க அவர்கள் அனைவரும் பொறுப்பேற்று, உழைக்க வேண்டும்.
சீனா மற்றும் இந்தியாவில் இருக்கும் குழந்தைகள் ஒரு மாதம் நம்மைவிட கூடுதலாக படிக்கிறார்கள். இவர்களுடன் ஒப்பிடும் போது நமது குழந்தைகள் சாதாரணமாக இருப்பதை நாம் ஏற்று கொள்ள முடியாது.
படிப்பு விஷயத்தில் அனைத்து பணிகளையும் ஆசிரியர்களின் தலையில் கட்டிவிட முடியாது. அவர்கள் தினமும் வீட்டுப் பாடம் எழுதுகிறார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும். இல்லையென்றால் அவர்கள் படிப்பில் சிறந்தவர்களாக திகழ முடியாது என்றார் ஒபாமா.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications