துபாயில் தமிழ்த் தேர் மாத கவிதை தொகுப்பு வெளியீடு
துபாயில் வானலை வளர்தமிழ் அமைப்பின் சார்பில் தமிழ்த்தேர் மாதாந்திர கவிதைத் தொகுப்பு நூல் வெளியீடு 20.03.2009 வெள்ளிக்கிழமை காலை கராமா சிவ் ஸ்டார் பவன் உணவகத்தில் நடைபெற்றது.
வானலை வளர்தமிழ் அமைப்பின் தலைவர் காவிரிமைந்தன் தலைமை தாங்கினார். செயலாளர் சந்திரசேகர் வரவேற்றார். ஜியாவுதீன் முன்னிலை வகித்தார்.
இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழக தலைவர் நீடூர் முனைவர் அய்யூப், மனிதவள மேம்பாட்டு பயிற்சியாளர் ராமன், கவிஞர் ஷாகுல் ஹமீது, யுஏஇ தமிழ்ச் சங்க தலைவர் ரமேஷ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். தமிழ்த்தேர் மாதாந்திர கவிதை இதழை முனைவர் அய்யூப் வெளியிட முதல் இதழை அக்பர் அலி பெற்றுக் கொண்டார்.
முனைவர் அய்யூப் அவர்கள் தனது உரையில் பலரது பேச்சுக்களை பல்வேறு நிகழ்வுகளில் கேட்டதன் காரணமாக ஏற்பட்ட தாக்கத்தின் காரணமாக பல்வேறு நலப்பணிகளை மேற்கொள்ள காரணமாக இருந்து வருவதாகக் குறிப்பிட்டார்.
மனிதவள மேம்பாட்டு பயிற்சியாளர் ராமன் தனது உரையில் எவர் ஒருவர் ஓய்வு நேரத்தை மிகவும் பயனுள்ளதாக செலவழிக்கின்றாரோ அவர் வாழ்வில் உயர்நிலையினை அடைய முடியும் என்றார்.
வாழ்க்கையில் சின்ன சின்ன விஷயங்களையும் செயல்படுத்துவதன் காரணமாக உயர்வு பெறலாம். நாம் யோசனை செய்வதால் களைப்படையப் போவதில்லை. நல்ல சிந்தனைகள் நம்மை வாழ்வில் உயர்த்தும். பாராட்டுவதன் மூலம் மகிழ்வு அடையலாம். வாழ்வு மகிழ்வானதாய் இருக்கும் என்றார்.
அன்புடன் அல்லாவுக்கு எனும் கவிதை நூலாசிரியர் ஷாகுல் ஹமீது பாரதி, பாரதிதாசன், அவ்வையார், நாமக்கல் கவிஞர், கண்ணதாசன், கவிக்கோ அப்துல் ரஹ்மான், வைரமுத்து உள்ளிட்ட பலரது கவிதைகள் மற்றும் தத்துவங்களை திறனாய்வு செய்து பேசினார்.
பணம் மற்றும் உழவு எனும் தலைப்பில் கவிஞர்கள் கவிதை வாசித்தனர். தமிழ் ஆர்வலர்கள் பலர் பங்கேற்றனர்.
அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கவிஞர்கள் பலர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications