மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்- விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது

கும்பாபிஷேகத்தையொட்டி கோவில் திருப்பணிகள் ரூ.12 கோடி செலவில் கடந்த 3 மாதங்களாக சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. கும்பாபிஷேக ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் கருமுத்து கண்ணன்,கோவில் நிர்வாக அதிகாரி ராஜநாயகம், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகிறார்கள்.
அம்மன் கோபுரத்தில் தங்கத்தகடு பதிக்கும் பணி, வெளிப்புற சுவர்களுக்கு மாணிக்க பட்டை தீட்டுவது, பழங்கால ஓவியங்களுக்கு அதன் பழமை மாறாமல் தற்போது வர்ணம் பூசுவது ஆகிய பணிகள் முடிந்த நிலையில் தற்போது கோவில் புது பொலிவுடன் ஜொலித்து வருகிறது.
அனைத்து கோபுரங்களிலும் வேலை முடிவடைந்து விட்டதால் கோவில் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. இதை தொடர்ந்து அம்மன் மற்றும் சுவாமி சன்னதி அமைந்துள்ள பகுதிகளில் ரூ. 60 லட்சம் மதிப்பில் குளு குளு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. விக்னேஸ்வர பூஜை என்பது தடைகளை தகர்க்க வேண்டி முழு முதல் கடவுளான விநாயகருக்கு செய்யப்படுவதாகும்.
காலை 9 மணிக்கு விக்னேஸ்வர பூஜை நடந்தது. நாளை காலை 8 மணிக்கு கணபதி ஹோமம் நடத்தப்படுகிறது. நாளை மறு நாள் நவக்கிரக ஹோமம் நடைபெறுகிறது.
29ம் தேதி தனபூஜை, 30ம் தேதி சாந்தி ஹோமம், 31ம் தேதி மூர்த்தி ஹோமம் என வரிசையாக ஹோமங்கள் மற்றும் பூஜைகள் நடைபெறுகின்றன.
கும்பாபிஷேகத்துக்கு சரியாக ஒரு வாரம் முன்பு வரும் ஏப்ரல் 2ம் தேதி காலை யாக சாலை பூஜைகள் தொடங்குகின்றன. இதற்காக வடக்காடி வீதியில் யாகசாலை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
யாகசாலை பூஜைக்குரிய பொருட்களை வழங்க விரும்பும் பக்தர்கள் இதற்காக அம்மன் சன்னதி முன்பு கோவில் நிர்வாகம் சார்பில் திறக்கப்பட்டுள்ள தனி கவுண்டரில் பூஜைக்குரிய பொருட்களை கொடுத்து ரசீதை பெற்று கொள்ளுமாறு கோவில் நிர்வாகம் கேட்டு கொண்டுள்ளது.
இதை தொடர்ந்து ஏப்ரல் 6ம் தேதி பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. பின்னர் ஏப்ரல் 8ம் தேதி காலை 9.15 மணிக்கு ராஜ கோபுரங்களுக்கும், 9.30 மணிக்கு மீனாட்சி அம்மன் கோபுரத்திற்கும், 9.45 மணிக்கு சுவாமி கோபுரத்திற்கும் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது.
கும்பாபிஷேகத்தையொட்டி புதுப் பொலிவு பெற்றுள்ள மீனாட்சி அம்மன் கோவிலின் அனைத்து கோபுரங்கள் பிரகாசமாக காணப்படுகின்றன.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications