திருமணத்தை நிராகரித்த துணிகர சிறுமி - பிரதீபா பாட்டீல் பாராட்டு
டெல்லி: 12 வயதில் தன்னை திருமணத்திற்கு கட்டாயப்படுத்தியும், துணிச்சலாக போராடி திருமணத்தை தடுத்து நிறுத்தியுள்ளார் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பழங்குடியின சிறுமி. இதைக் கேள்விப்பட்ட குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் அந்த சிறுமியை டெல்லிக்கு வரவழைத்துப் பாராட்டினார்.
மேற்கு வங்காள மாநிலம் புருசியா மாவட்டம் ஜகல்தா பகுதியில் உள்ள மலைவாழ் பகுதியை சேர்ந்தவள் ரேகா கலிந்தியா (12). இங்கு வாழும் பழங்குடியினப் பெண்களுக்கு 12 வயதிலேயே ஏலத்தில் விட்டு கல்யாணம் செய்து வைத்து விடுவார்கள்.
அதன்படி ரேகாவையும் ஏலத்தில் விட்டு கல்யாணம் செய்து வைக்க முடிவானது. ஆனால் ரேகா திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று கூறியுள்ளார்.
பிடிவாதமாக இருந்து திருமணத்தை நிறுத்தி விட்டார் ரேகா. இந்த செய்தியைப் படித்த குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், அந்த சிறுமியின் துணிச்சலை பாராட்ட முடிவு செய்து தனது சிறப்புச் செயலாளர் அர்ச்சனா தத்தா மூலம் ரேகாவை டெல்லிக்கு அழைத்து வர உத்தரவிட்டார்.
இதையடுத்து ரேகா குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அழைத்து வரப்பட்டார். கழிப்பறை, மின்சார வசதி கூட இல்லாத குடிசையில் வாழ்ந்து வரும் ரேகா, குடியரசுத் தலைவர் மாளிகையின் பிரமாண்டத்தைப் பார்த்து வியந்து போய் விட்டார்.
தன்னை சந்தித்த ரேகாவை, குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் பாராட்டினார். அப்போது அவரிடம், நான் ஆங்கிலம் படிக்க விரும்புகிறேன். படித்து முடித்து நல்ல வேலை பார்க்கவே விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் ரேகா.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications