துபாய்-இனிய திசைகள் இதழ் அறிமுகம்
நிகழ்ச்சிக்கு இஸ்லாமுதீன் தலைமை வகித்தார். அஹ்மத் இம்தாதுல்லாஹ் வரவேற்றார். இனிய திசைகள் ஏழாம் ஆண்டு இதழ்களை திருச்சி மாவட்ட அரசு டவுண் காஜி காரி மவ்லவி கே. ஜலீல் சுல்தான் வெளியிட்டார்.
இனிய திசைகள் இதழ் கல்வி மற்றும் சமுதாய மேம்பாட்டுக்கு பல்வேறு வழிகளில் ஆற்றி வரும் பணிகளை நினைவு கூர்ந்த அவர் இதழின் வளர்ச்சிக்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொண்டார்.
நிகழ்வில் மவ்லவி தாவூத் அலி ஹஜ்ரத், சர்புதீன் ஹாஜியார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள அமீரக இனிய திசைகள் வாசகர் வட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.
கல்வி விழிப்புணர்வு விழா:
துபாயில் இந்திய முஸ்லிம் நல அறக்கட்டளை கல்வி விழிப்புணர்வு விழாவினை வெள்ளிக்கிழமை தேரா லாஸ்ட் ஹவர் ரெஸ்டாரெண்ட்டில் நடத்தியது.
பொறியாளர் எல். ஷேக் முஹம்மது தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் எஃப். சவுக்கத் அலி வரவேற்புரை நிகழ்த்தினார்.
என்ன? எங்கே? படிக்கலாம் என்ற உயர்கல்வி படிப்பதற்கான வழிகாட்டுதலை திருச்சி அய்மான் கல்லூரி செயலாளர் சையது ஜாபர் நடத்தினார். மடிக் கணினி உதவியுடன் கல்வி குறித்த தகவலை விவரித்தார்.
பெற்றொர்கள் அயல்நாட்டில் இருக்கும் சூழ்நிலையில் பிள்ளைகள் தாயகத்தில் இருக்கும் போது அவர்களை கல்வியில் சிறப்பிடம் பெறுவதற்காக எந்த வகையில் ஆலோசனை கூறுவது என்பன போன்ற மனநல ஆலோசனைகளை ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும நலத்துறை மேலாளர் முஹைதீன் பாட்சா வழங்கினார். குறிப்பாக பிள்ளைகள் நல்ல விஷயங்கள் செய்யும் போது அவர்களை பாராட்டி உற்சாக மூட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
காயல்பட்டணம் மருத்துவர் பி.எம். செய்யது அஹ்மது அவர்கள் மருத்துவம் படித்த நிகழ்வுகளை விவரித்தார். மவ்லவி ஆவூர் இஸ்மாயில் ஹஸனி ஆலிம் பட்டம் பெற்ற தான் உயர்கல்வி கற்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதை விவரித்தார். தேரிழந்தூர் தாஜுத்தீன் கல்வி விழிப்புணர்வு பாடலை பாடினார். முதுவை ஹிதாயத் கல்வித் தகவல்களை வழங்கினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications