விழுப்புரத்தில் வரும் 5ம் தேதி மிஸ் கூவாகம் அழகி போட்டி
விழுப்புரம்: விழுப்புரத்தில் வரும் 5ம் தேதி மிஸ் கூவாகம் அழகி போட்டி நடைபெறும் என மாவட்ட அரவாணிகள் நல சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்ட அரவாணிகள் நலச் சங்க தலைவர் ராதாம்மாள் கூறுகையில்,
விழுப்புரம் ஆஞ்சநேய திருமண மண்டபத்தில் வரும் 5ம் தேதி மிஸ் கூவாகம் 2009 என்ற அழகி போட்டி ஐந்தாவது முறையாக நடைபெறுகின்றது.
அரவாணிகளுக்கு, விழுப்புரம் மாவட்டத்தில் தான் முதன் முறையாக ரேஷன்கார்டு, பட்டா போன்றவை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மற்ற மாவட்டங்களிலும் அரவாணிகளுக்கு சலுகைகள் கிடைத்து வருகிறது.
அரவாணிகள் பாலியல் தொழிலுக்கு செல்லாமல் இருக்க அரசு துறைகளில் கல்வி தகுதிக்கேற்ப வேலை வாய்ப்புகள் வழங்க வேண்டும்.
நலவாரியம் அமைத்து கொடுத்த முதல்வர் கருணாநிதி குடியிருப்பு, அடையாள அட்டை, வேலை வாய்ப்புகளையும் வழங்க வேண்டும். நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்தி அரவாணியாக மாற்றவில்லை. மாறுபவர் முழு சம்மதத்துடன் தான் அரவாணியாக மாற்றப்படுகிறார்.
பிச்சை எடுப்பது, பாலியல் தொழிலில் ஈடுபடுவது போன்ற புகார்கள் எங்கள் மீது கூறப்படுகின்றது. முறையான வேலை வாய்ப்புகள் இருந்தால் யாரும் இது போன்றசெயல்களில் ஈடுபடமாட்டார்கள்.
வட மாநிலங்களில் எங்களுக்கு மரியாதை கொடுக்கிறார்கள். சுப காரியங்களுக்கு அழைக்கிறார்கள். தமிழகத்தில் தான் எங்களை ஏற்க மறுக்கிறார்கள். நாங்கள் கால் வைத்தால் அந்த இடம் செழிக்கும் என்றார்.
இந்த அழகிப் போட்டிக்கு தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியத்தில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்பது குறிப்படதக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications