ஜெ.க்கு நன்றி-பிரிட்டிஷ் தமிழர் பேரவை
லண்டன்: தனி ஈழம் அமைப்பேன் என்ற அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதாவின் ஆணித்தரமான பேச்சுக்கு பிரிட்டிஷ் தமிழர் பேரவை தங்களது நன்றியை தெரிவித்துள்ளது.
இது குறித்து பிரிட்டிஷ் தமிழர் பேரவை ஜெயலலிதாவுக்கு அனுப்பிய கடிதத்தில்,
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தனித் தமிழீழமே நிரந்தரமான ஒரே தீர்வு என தமிழக முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் தெரிவித்த ஆணித்தரமான கருத்தை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர் அமைப்புக்களுடன் பிரிட்டிஷ் தமிழர்களும் இணைந்து வரவேற்கின்றனர். அத்துடன் இது எம்மை மேலும் ஊக்கப்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டின் 6 கோடிக்கும் மேற்ப்பட்ட மக்களின் முதலமைச்சராக இரண்டு தடவைகள் இருந்த தழிழ் தலைவியின் இந்தக் கூற்று மிகமுக்கியமானதாக கருதப்பட வேண்டிய ஒன்றாக அமைந்துள்ளது.
தமிழர்களின் கோரிக்கைகளுக்கு நீண்ட காலமாக உணர்வுபூர்வமாக ஆதரவளித்து வரும் தமிழகத்தின் தமிழ் தலைவர்களுக்கு எமது நன்றிகளை வெளிப்படுத்தும் இதேவேளை, தமிழரின் போராட்டம் மிக முக்கியமான காலகட்டத்தில் செல்வி ஜெயலலிதா அவர்கள் வெளியிட்ட இந்த கருத்து எம்மை மேலும் ஊக்கப்படுத்துவதாக அமைந்திருக்கின்றது.
இந்தநிலையில் சர்வதேச அரசுகளும், ஐநா சபை, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற சர்வதேச நிறுவனங்களும் அமைப்புக்களும் அதிமுக தலைவியின் இந்த நிலைப்பாட்டைப் பின்பற்றி தமிழர்களுக்கு நீதியையும், இலங்கையிலும் தெற்காசியாவிலும் சமாதானத்தையும் அமைதியையும் கொண்டு வருமாறு பிரிட்டிஷ் தமிழர் பேரவை வேண்டுகோள் விடுகின்றது என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
-
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications