ஆன்ம உரம் தந்த ஜெ.-ஆஸ்திரேலிய இந்து அமைப்பு

Subscribe to Oneindia Tamil

Vanni Attack-Injured tamils
சிட்னி: தனி ஈழம் அமைப்பேன் என்ற அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதாவின் ஈழத் தமிழர்களுக்கு ஆன்ம உரம தந்திருப்பதாக ஆஸ்திரேலிய இந்து சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து அவர்கள் ஜெயலலிதாவுக்கு அனுப்பிய கடிதத்தில்,

சிங்கள அரசின் திட்டமிட்ட இன அழிப்பில் பட்டினி கொடுமையிலும், மருந்து மாத்திரைகள் தடையினுள்ளும் சாவிற்குள் இருந்த மீள்வதற்கு தவியாய் தவிக்கும் ஈழ தமிழரின் ஒரே நம்பிக்கை எம் புரட்சித் தலைவி செல்வி ஜெயலலிதா அவர்களே,

இலங்கையிலுள்ள தமிழருக்கு தனி ஈழம் தான் ஒரே தீர்வு என்றும், அவர்களுக்கு நான் தமிழ் ஈழம் அமைத்து கொடுப்பேன் என்ற உறுதியான உங்கள் வார்த்தைகள் உலகெல்லாம் பரந்து வாழும் தமிழர்கள் அனைவரையும் பூரிக்க வைத்திருக்கிறது.

இத்தகைய பாரிய அவலங்களுக்குள்ளும் இன்னும் ஓடாமல் ஓயாமல் தொடர்ந்து சாவுக்குள் வாழும் மக்களுக்கு உங்கள் வார்த்தையே ஆதார சக்தியாகும். அவர்களுக்கு நான் தனி ஈழம் அமைப்பேன் என்ற உங்கள் வைர வரிகளே எமக்கெல்லாம் தேவ அசரீரியம்மா.

கவிதை வரிகளோ, வார்த்தை ஜாலங்களோ உங்களிடம் என்றும் இருந்ததில்லை. மாறாக செய்வதையே சொல்லும் தெளிவான உறுதியான வார்த்தைகள் நொந்து நூலாகிப் போன இதயங்களுக்கு ஆன்ம உரத்தை கொடுத்துள்ளது.

ஈழ விடுதலையை எடுத்து நோக்குகையில் அதில் அதிமுகவின் பங்கு சொல்லில் அடங்காது. போராட்டத்தின் ஆரம்ப காலம் தொட்டு, அதன் எழுச்சி காலம் வரைக்கும் எம் மனங்களில் காலம் காலமாக குடியிருக்கும் எம் புரட்சி தலைவர் அமரர் எம்ஜிஆர் அவர்கள் அதன் உண்மையான காவலனாக இருந்து மாபெரும் உதவிகளை அள்ளி வழங்கினார்.

கவிதைகள், கதைகள் சொல்லி ஊரை ஏய்ப்பவர்கள் போலல்லாது உண்மையாகவே தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னோக்கி நகர்த்திய பெருமைக்கு உரியவர். தமிழ் மானத்தோடு வாழ்கின்ற உலகத் தமிழ் நெஞ்சங்களில் கலங்கரை விளக்காக என்றென்றும் வாழ்பவர்.

அன்று அவரிடத்தே இருந்த அதே தெளிவும் உறுதியும் இன்று அவர் வழியில் வந்த எம் பெரும் தலைவியிடத்திலே மிகவும் தெளிவாகவும் ஆணித்தரமாகவும் இருப்பது கண்டு ஈழத் தமிழ் இனம் மெய்சிலிர்த்து போயுள்ளது.

அன்பார்ந்த தமிழக மக்களே,

ஈழ தமிழரின் இன்னல்கள் நீக்க தினம் தினம் மாபெரும் தியாகங்களையும் ஆர்பாட்டங்களையும் போராட்டங்களையும் ஆளும் கூட்டணியினரின் கொடும் அராஜகங்களுக்கு மத்தியிலும் சளைக்காமல் நிகழ்த்திக்கொண்டே இருக்கிறீர்கள்.

தொப்புள் கொடி உறவுகளே உங்களின் இந்த போராட்டங்கள் தியாகங்களுக்கு நாம் கால காலத்துக்கும் வழி. இத்தேர்தலில் ஈழத் தமிழ் ஆதரவு அணியாக திகழும் புரட்சித் தலைவியின் தலைமையி்ல் ஒன்று சேர்ந்துள்ள அதிமுக கூட்டணியை அனைத்து தொகுதிகளிலும் அமோக வெற்றியீட்ட வைப்பதே ஈழ தமிழரின் இன்றைய இன்னல்களை நீக்க நீங்கள செய்யவேண்டிய மாபெரும் வரலாற்று கடமையாக உங்கள் முன் எழுந்து நிற்கிறது.

உங்கள் பற்றுகள் பாசங்களை கடந்து நீங்கள் எடுக்க வேண்டிய காலத்தின் நிர்ப்பந்தம் இது. இதை விடுத்து எது செய்தாலும் அது ஈழ தமிழனை பாதுகாக்கப் போவது இல்லை.

உண்ண ஏதுமில்லை
குடிப்பதற்குத் தானும் தண்ணீர் கூட இல்லை
உடுக்க மாற்றுடை ஏதும் இல்லை
மருந்துகள் எதுவும் இல்லை
ஏன் மருத்துவமனைகள் கூட இல்லை
தினமும் பல்லாயிரக்கணக்கில் செல் மழைகள்
வானத்து வல்லூறுகளின் இடை விடாத குண்டு வீச்சுகள்.

என் செய்வார் ஈழ மக்கள்.

வீடிழந்து வாழ்விழந்து
உப்புக் காற்றும் உவர் நீருமே உணவாக
கொட்டும் வெயிலின் நடுவினில் கடலின் சுடு மணல் மடியினில்
பிணக் குவியல்களின் இடையிலும்
இன்னும் போரை சுமக்கின்றார்கள் - தமக்கு
இனிய விடியல்கள் கிடைக்குமென்று

கிடைக்குமா உறவுகளே? செய்வீர்களா உறவுகளே?

உங்களின் வாக்குகளை நம்பி அங்கு பல லட்சம் உயிர்கள் அங்கு இன்னும் உயிர் கொண்டு ஏக்கப் பெருமூச்சுடன் வாழும் அவர்களுக்காய் ஒரு கணம் சிந்தியுங்கள்.

உங்கள் வாக்கே எங்கள் வாழ்வு

இல்லையேல் ஈழத்தில் தமிழ் இனம் இருந்ததாக வரலாறு சொல்லும் ஆனால் தமிழன் என்று எவனுமே மிஞ்சப் போவது இல்லை.

ஈழம் அமைப்பேன் என்ற புரட்சித தலைவியின் அணி நின்று ஈழத் தமிழரை உடன் காப்போம் என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+