பிரபல சரோத் கலைஞர் அலி அக்பர் கான் மரணம்

Subscribe to Oneindia Tamil

Ali Akbar Khan
கொல்கத்தா: பிரபல சரோத் கலைஞர் அலி அக்பர் கான் கலிபோர்னியாவில் உள்ள அவரது இல்லத்தில் இன்று மரணமடைந்தார்.

கலிபோர்னியாவின் சான் அன்செல்மோ நகரில் உள்ள கானுடைய வீட்டில் இன்று காலை 10.30 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது.

அலி அக்பர் கானுக்கு வயது 87. சரோத் கலையில் மிகப் பெரிய ஜாம்பவானாக திகழ்ந்தவர் அக்பர் கான். அவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் மரணம் நேரிட்டதாக அவரது செயலாளர் ஆசிஷ் ராய் தெரிவித்துள்ளார்.

அக்பர் கானுக்கு 3 திருமணங்கள் மூலம் 11 குழந்தைகள் உள்ளனர்.

1922ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி தற்போதைய பங்களாதேஷில் உள்ள குமில்லா என்ற இடத்தில் பிறந்தவர் அக்பர் கான். பிரபல இசைக் கலைஞர் உஸ்தாத் அல்லாவுதீன் கானின் மகன் ஆவார் இவர்.

இந்தியாவின் உயரிய விருதுகளான பத்ம விபூஷன், பத்ம பூஷன் ஆகியவற்றைப் பெற்றுள்ளார் அக்பர்கான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+