கைவிடப்பட்ட முதியவருக்கு புது வாழ்வு கொடுத்த போலீஸ்
சென்னை: மனைவி, மகனால் கை விடப்பட்டு சாலையோரம் கால்கள் பாதிக்கப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட ஒரு மாதமாக அனாதையாக கிடந்த முதியவருக்கு, சென்னை அபிராமபுரம் போலீஸார் புது வாழ்வு கொடுத்து ஆதரவற்றோர் இல்லம் ஒன்றில் சேர்த்து விட்டுள்ளனர்.
அந்த பாவப்பட்ட முதியவரின் பெயர் காளிமுத்து. சொந்த ஊர் பரமக்குடி. 63 வயதாகிறது. மனைவி பெயர் பாப்பா, மகன் பெயர் கண்ணன். இருவரும் ஆலந்தூரில் வசித்து வருகின்றனர். முதியவரை இவர்கள் இருவரும் கை விட்டு விட்டனர்.
இதனால் தெருவில் தங்கிக் கொண்டு கிடைத்த வேலையைப் பார்த்து பிழைப்பு நடத்தி வந்தார் காளிமுத்து.
அபிராமபுரம் பகுதியில் உள்ள ஒரு தெருவில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இரு கால்களும் பாதிக்கப்பட்ட நிலையில் விழுந்து கிடந்தார் காளிமுத்து. அப்பகுதி வழியாக வருவோர், போவோர் அவரைப் பார்த்து விட்டு அப்படியே தங்களது வேலையைப் பார்த்துப் போய்க் கொண்டிருந்தனர்.
யாரும் அந்த முதியவருக்கு உதவி செய்ய முன்வரவில்லை. யாரேனும் இரக்கப்பட்டு, டீ, பன் வாங்கிக் கொடுத்ததால் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு கிடந்தார் காளிமுத்து.
இதைப் பார்த்த அபிராமபுரம் போலீஸார் முதியவருக்கு உதவ முயன்றனர். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் எம்.எஸ்.பாஸ்கர் கூறுகையில், அனைத்து வகையிலும் அவருக்கு உதவ முயன்றோம். அரசு மருத்துவனைகள், ஆம்புலன்ஸ், பல தொண்டு நிறுவனங்களை அணுகினோம். ஆனால் கூட யாராவது இருந்தால்தான் எங்களால் அழைத்துச் செல்லமுடியும் என அவர்கள் கூறி வர மறுத்து விட்டனர்.
இதையடுத்து அக்கம் பக்கத்தினரை அழைத்த போலீஸார் யாராவது ஒருவர் முதியவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உதவுமாறு கோரினர். ஆனால் யாருமே முன்வரவில்லையாம்.
சதீஷ் என்பவர் காளிமுத்துவுக்கு தொடர்ந்து உணவு வழங்கி வருகிறார். அவர் கூறுகையில், கடந்த ஒரு வாரமாக பெரியவரை மருத்துவமனைக்கோ அல்லது இல்லம் ஏதாவதுக்கோ மாற்ற முயற்சித்தோம். ஆனால் யாருமே உதவ முன்வரவில்லை.
தெருவில் காயமடைந்து கிடக்கும் நாய்க்கு உதவ நம் மக்கள் ஓடி வருவார்கள். ஆனால் ஒரு மனிதனைக் காப்பாற்ற ஒருவரும் வராதது துயரமானது என்றார்.
பெரியவரின் உயிரைக் காப்பாற்ற போலீஸாரே தினசரி சாப்பாடு வாங்கிக் கொடுத்தனர். ஒரு டாக்டரையும் ஏற்பாடு செய்து சிகிச்சை அளித்து வந்தனர்.
யாருமே உதவ முன்வராததால் தாங்களே பெரியவரை மருத்துவமனையில் கொண்டு போய்ச் சேர்க்க முடிவு செய்தது போலீஸ். இந்த நிலையில், கொளத்துவான்சேரியைச் சேர்ந்த லிட்டில் டிராப்ஸ் முதியோர் இல்லம் உதவிக்கு வந்தது.
காளிமுத்துவை தங்களது பொறுப்பில் எடுத்துக் கொள்வதாக கூறி அவர்கள் ஆம்புலன்ஸ் ஒன்றில் அழைத்துச் சென்றனர். இதனால் காளிமுத்துவுக்கு புது இல்லம் கிடைத்தது, புது வாழ்க்கையும் கிடைத்துள்ளது.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications