சபரிமலை சீசனுக்கு தனி பட்ஜெட் - தேவஸ்தானம் முடிவு
திருவனந்தபுரம்: சபரிமலையில், இந்த ஆண்டு ஐயப்பன் கோவில் மண்டல மகர விளக்கு விழாவுக்கு தனி பட்ஜெட் போடப்படும் என திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு முடிவு செய்துள்ளது.
சபரிமலை ஐய்யப்பன் கோவில் திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் நடைபெறும் மண்டல மகரவிளக்கு விழா பிரசித்தி பெற்றது. நாடு முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டி ஐயப்பனைத் தரிசிக்க வருவார்கள்.
இந்த நிலையில் இந்த ஆண்டு விழாவுக்கு தனி பட்ஜெட் போட தேவஸ்வம் போர்டு தீர்மானித்துள்ளது.
இதுகுறித்து போர்டு தலைமை ஆணையர் ஜெயக்குமார் கூறுகையில், மண்டல மகர விளக்கு சீசனுக்காக தனி பட்ஜெட் போடப்படுவது இதுவே முதல் முறையாகும்.
இதன் மூலம் திருவிழாவுக்கான செலவுகள் கட்டுப்படுத்தப்படும், முறையாக கண்காணிக்கப்பட்டு செலவழிக்கப்படும்.
மேலும் திருவிழா முடிந்தவுடன் வரவு, செலவுக் கணக்கு அறிக்கையும் வெளியிடப்படும்.
இந்த பட்ஜெட்டைத் தயாரிப்பதற்காக தேவஸ்வம் போர்டு கணக்கு அதிகாரி, நிதி அதிகாரி, சபரிமலை செயல் அதிகாரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார்.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications