ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் நாளை கும்பாபிஷேகம்
ராமேசுவரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாம் திருக்கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. இதையடுத்து பக்தர்கள் கூட்டம் குவியத் துவங்கியுள்ளது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவில் இந்திய அளவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்துக்களின் புண்ணிய தலங்களில் ஒன்று என்பதால் இங்கு பல மாநில பக்தர்கள் வந்து தீர்த்தமாடி செல்கின்றனர்.
இந்நிலையில் இந்த கோவில் கும்பாபிஷேகம் நாளை காலை சுமார் 9.50 மணிக்கு நடைபெறுகிறது. பிள்ளையார்பட்டி சர்வசதாகம் பிச்சை குருக்கள் தலைமையில் 28 வேத விற்பன்னர்கள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைக்கின்றனர்.
முன்னதாக கோவில் திருப்பணிகள் அனைத்தும் முடிந்தநிலையில் கடந்த 28ம் தேதி கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் நடந்து வருகின்றன. இன்று காலை 8.40 மணிக்கு நான்காம் கால யாக சாலை பூஜை நடந்தது. ஐந்தாம் கால பூஜை மாலை 5.30 மணிக்கும், ஆறாம் கால பூஜை நாளை காலையும் நடக்க இருக்கின்றன.
கடைசியாக இங்கு கடந்த 2001ல் கும்பாபிஷேகம் நடந்தது. அடுத்த கும்பாபிஷேகம் 2013ல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கோவிலின் கிழக்கு ராஜகோபுரத்தின் மேற்பகுதியில் உள்ள யாழி நான்கு ஆண்டுகளுக்கு முன் கீழே விழுந்து சேதமானது.
இதையடுத்து அவை ரூ. 23 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டு, தற்போது கும்பாபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.
மதுரையிலிருந்து சிறப்பு ரயில்...
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகம் வரும் என்பதால் மதுரையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு சிறப்பு ரயில் விடப்பட்டுள்ளது. இது நாளை காலை 5.30 மணிக்கு கிளம்பி 8.45 மணிக்கு ராமேஸ்வரம் சென்று சேரும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications