வாசனிடம் மனு கொடுக்க வந்த பெண்- மேடையிலிருந்து தள்ளிய காங்கிரசார்
செங்கோட்டையில் பெருந்தலைவர் காமராஜரின் 107வது பிறந்த நாள் விழா மற்றும் கல்வி வளர்ச்சி நாள் விழா எஸ்.எம்.எஸ். அரசு ஆண்கள் பள்ளி சார்பில் நடைபெற்றது.
விழாவில் மத்திய கப்பல் துறை அமைச்சர் வாசன், தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் சுதர்சனம், நெல்லை எம்பி ராமசுப்பு, தென்காசி எம்எல்ஏ கருப்பசாமி பாண்டியன், கடையநல்லூர் எம்எல்ஏ பீட்டர் அல்போன்ஸ், மாவட்ட ஆட்சியர், கல்வி துறை, வருவாய் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
விழாவுக்கு வந்திருந்த ஆயிரக்கணக்கானோரில் பலர் அமைச்சர்கள், அதிகாரிகளிடம் மனு கொடுக்க முயன்றனர். ஆனால் கட்சி பிரமுகர்கள் சிலரிடம் மட்டுமே மனுக்களை வாங்கி சம்பந்தப்பட்டவர்களிடம் ஓப்படைத்தனர்.
செங்கோட்டை வல்லம் ரோட்டை சேர்ந்த குட்டி என்பவரது மனைவி செல்லம்மாள் (59). இவருக்கு குழந்தைகள் கிடையாது. உறவினர்களும் ஆதரவின்றி உள்ளதாலும், வயதான, வறுமையான சூழ்நிலையை கருத்தில் கொண்டு கடந்த 5 ஆண்டுகளாக முதியோர் உதவித் தொகை கேட்டு மனுமேல் மனு செய்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் விரக்தி அடைந்தார்.
இந்நிலையில் விழாவுக்கு வந்த வாசனிடம் மனு கொடுக்க மேடை ஏறினார். அப்போது கட்சி பிரமுகர்கள் மேடையில் மனு கொடுக்க விடாமல் தடுத்து பெண்ணென்றும் பாராமல் மேடையில் இருந்து செல்லம்மாளை பிடித்து கீழே தள்ளினர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!













Click it and Unblock the Notifications