வல்லநாட்டில் போலீசாருக்கான துப்பாக்கி சுடும் போட்டி
தூத்துக்குடி: வல்லநாடு துப்பாக்கி சுடும் தளத்தில் போலீசாருக்கான மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி தொடங்கியது.
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் ஆண்டுதோறும் போலீசாருக்கான மாநில அளவில் துப்பாக்கி சுடும் போட்டிகள் நடந்து வருகின்றன. இந்த ஆண்டு தமிழக போலீசாருக்கான துப்பாக்கி சுடும் போட்டிகள் வல்லநாடு துப்பாக்கி சுடும் தளத்தில் தொடங்கியது. இதில் தமிழக காவல்துறையை சேர்ந்த முக்கிய அணிகள் மற்றும் வீரர்கள் கலந்து கொண்டனர்.
தெற்கு, வடக்கு, மேற்கு மற்றும் மத்திய மண்டல காவல் துறை அணிகள், ஆயுதப்படை பிரிவினர், கமாண்டோ படை பிரிவினர், தலைமையிடத்து அணியினர் உள்ளிட்ட 8 அணிகளை சேர்ந்த 200 பெண்கள் உள்பட 450 பேர் கலந்து கொண்டனர்.
இதனை சென்னை புறநகர் கமிஷனர் ஜாங்கிட் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். ஐஜி தமிழ்செல்வன் முன்னிலை வகித்தார். சிறப்பு அதிரடிப்படை ஐஜி சைலேந்திரபாபு, நெல்லை மாநகர கமிஷனர் குணசீலன், தூத்துக்குடி எஸ்பி செந்தில் குமார், அணி கமாண்டென்டுகள் குணசேகரன், பால்ராஜ், சேகர், உசேன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். போட்டிகள் நாளை வரை நடக்கின்றன.
இப்போட்டியில் ரைபிள், பிஸ்டல், ரிவல்வார், பிக்போர், கார்பைன், சென்டர் பயர் உள்ளிட்ட பிரிவுகளில் நடக்கிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications