For Daily Alerts
Just In
லாரன்ஸ் அறக்கட்டளை-உதவிய துபாய் தமிழ்ச் சங்க நிறுவனர்
நடிகரும் இயக்குநருமான ராகவேந்திரா லாரன்ஸ் நடத்தும் அறக்கட்டளைக்கு துபாயைச் சேர்ந்த சந்திரா ரவி நிதியுதவி வழங்கினார்.
துபாய் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனர் மற்றும் செயலாளரான இவர், ரிதம் ஈவன்ட்ஸ் எனும் நிறுவனதின் நிர்வாக இயக்குநராக இருந்து வருகிறார்.
ஏழை மாணவர்கள், ஆதரவற்றோர், ஊனமுற்றோருக்கு உதவி வரும் ராகவேந்திரா லாரன்ஸுக்கு தங்களால் முடிந்த அளவு உதவ முடிவு செய்த சந்திரா ரவி, சென்னை அசோக் நகரில் உள்ள லாரன்ஸின் அறக்கட்டளை அலுவலகத்துக்குச் சென்று இந்த உதவியை வழங்கினார்.