அரவிந்தர் புதுச்சேரி வந்தது ஏன்?

அரவிந்தரின் 100வது பிறந்த தினத்தையொட்டி 1972ம் ஆண்டிலும் தபால் தலை வெளியிடப்பட்டது.
சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட அரவிந்தர் 1910ம் ஆண்டு தனது கர்மயோகி பத்திரிக்கையில் எழுதிய ஒரு கட்டுரையையடுத்து அவரை மகா ஆபத்தான மனிதர் என்று அறிவித்தது அப்போது இந்தியாவை ஆண்ட பிரிட்டஷ் அரசு.
அவரைக் கைது செய்யவும் முயன்றது. இதையடுத்து அந்த ஆண்டு ஏப்ரல் 4ம் தேதி பிரான்சின் கட்டுப்பாட்டில் இருந்த புதுச்சேரிக்கு இடம் மாறினார் அரவிந்தர்.
அவரை மகாகவி பாரதியார் தலைமையிலான தமிழர்கள் வரவேற்று சங்கர செட்டியார் என்ற பெரும் சீமானின் வீட்டில் தங்க வைத்தனர். இதையடுத்து தனது அரசியல் நடவடிக்கைகளை கைவிட்டுவிட்டு முழு ஆன்மீகத்தில் நுழைந்துவிட்டார் அரவிந்தர்.
அவர் புதுச்சேரி வந்து 2010 ஏப்ரல் 4ம் தேதியுடன் 100 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதையொட்டி அரவிந்தர் ஆசிரமம் சார்பில் பிரமாண்ட விழா நடக்கிறது.
இந் நிலையில் மத்திய திட்டத்துறை இணையமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
மகான் அரவிந்தர் புதுச்சேரி வந்து 2010 ஏப்ரல் 4ம் தேதியுடன் 100 ஆண்டுகள் ஆகின்றன. இதையொட்டி அரவிந்தர் ஆசிரமம் சார்பில் பிரமாண்ட விழா நடக்கிறது.
இந்த தினத்தை நினைவுகூறும் வகையில் தபால் தலை வெளியிட வேண்டும் என்று அரவிந்தர் ஆசிரம நிர்வாகத்தினர் கோரியுள்ளனர்.
இது குறித்து மத்திய தகவல் மற்றும் தபால்துறை அமைச்சர் ராசாவிடம் நானும், அரவிந்தர் ஆசிரம நிர்வாகி புருஷோத்தமனும் வைத்த கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது.
வரும் 4.4.2010ல் அரவிந்தரின் சிறப்புத் தபால் தலை வெளிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ராசா தெரிவித்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications