தமிழர்களின் உயிரை விட மேலான இலங்கை தூதரக பூத்தொட்டி...!
தலைநகர் டெல்லியில் உள்ள இலங்கை தூதரகத்தை தமிழ் உணர்வாளர்கள் சிலர் நேற்று தாக்கியிருக்கிறார்கள். சின்ன சேதம்தான். எந்த சிங்கள உயிருக்கும் பாதிப்பில்லை.
ஆனாலும் விழுந்தடித்துக் கொண்டு தன் கவலையை, அக்கறையைத் தெரிவித்த இந்திய அரசு, உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டது.
இலங்கைத் தூதரகத்துக்கு காவல்துறைப் பாதுகாப்பைப் பலப்படுத்தியது. நாம் இதைக் குற்றம் சொல்லவில்லை. செய்ய வேண்டியதுதான். ராஜாங்க உறவுகளைப் பேணிக் காக்க இந்த மாதிரி உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டியதுதான்.
ஆனால், இந்திய எல்லையிலிருந்து வெறும் 16 கிலோ மீட்டர் தொலைவில் சிங்களர்களால் வேட்டையாடப்பட்டுக் கொண்டிருக்கிறது ஒரு இனம். ஒரே நாளில் இருபதாயிரம்பேருக்கு மேல் கொல்லப்பட்டார்கள். இன்றும் தினம் தினம் வெளியில் தெரியாத தமிழர் படுகொலைகள் அரங்கேறிக் கொண்டுதான் உள்ளன.
இந்த கொடூரத்தை கொஞ்சமாவது தடுத்து நிறுத்துமாறு தீக்குளித்து தங்கள் கோபத்தையும் ஆற்றாமையையும் காட்டினார்கள் இந்தியப் பிரஜைகளான தமிழர்கள்…
ஆனால் ஜஸ்ட் வேடிக்கை பார்த்ததோடு நில்லாமல், அந்த இனப் படுகொலைக்கு கிரியா ஊக்கியாக நின்று ஆயுதங்களும் ஆதரவும் வழங்கிய குற்றச்சாட்டுக்கும் ஆளானது இந்தியா. நடந்த கொடுமைகளை மூடிமறைத்துக் கொண்டிருக்கும் சிங்கள இனவாதத்தின் கயமைத்தனத்துக்கு ஆதரவாக ஐநா வரை பாதுகாப்பாய் போய் வர இன்றைய இந்திய ஆட்சியாளர்கள் தயங்கவில்லை.
இதை விட இந்தியர்களான தமிழக மீனவர்கள் கிட்டத்தட்ட தினசரி தாக்கப்பட்டு வருகிறார்கள். நூற்றுக்கணக்கான மீனவர்கள் இதுவரை இலங்கை கடற்படையின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாகியுள்ளனர்.
ஆயிரக்கணக்கான மீனவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டு இலங்கை சிறைச்சாலையில் அடைபட்டு மீண்டுள்ளனர்.
இந்திய கடல் பகுதிக்குள் கூட மீன் பிடிக்க முடியாத அளவுக்கு இலங்கை கடற்படையின் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. இதை இதுவரை இந்திய அரசு உறுதியுடன் தடுத்து நிறுத்தவில்லை. மிகக் கடுமையான முறையில் ஒரு எச்சரிக்கை கூட இதுவரை விடப்படவில்லை. இந்திய தூதரகம் சார்பில் இலங்கையிடம் ஒரு கண்டனம் கூட தெரிவிக்கப்படவில்லை.
இவை ஏன், இலங்கைக் கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்ட இந்தியர்களான தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கு இதுவரை- ஒரு உயிருக்குக் கூட - இந்திய அரசின் சார்பில் நிதியுதவியோ அல்லது வேறு வகையான உதவிகளோ செய்யப்படவில்லை - குறைந்தபட்சம் ஆறுதல் கூட தெரிவிக்கப்பட்டதில்லை.
ஆனால், இலங்கை தூதரகம் தாக்கப்பட்ட அடுத்த சில நிமிடங்களில், போலீஸ் பாதுகாப்பு என்ன… தீவிர விசாரணை என்ன… வெளியுறவுத் துறைச் செயலாளரே வருத்தம் தெரிவிப்பதென்ன… அடடா.. புல்லரிக்கிறது இவர்கள் வேகம். ஆனால் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டபோது வெற்று ஆறுதல் வார்த்தைகளுக்குக் கூட பஞ்சமாகிவிட்டிருந்தது இந்திய அரசுக்கு.
தமிழ்நாட்டிலிருந்து முதல்வர் கருணாநிதி கடிதம் கடிதமாக எழுதினார்… எழுதிக் கொண்டிருக்கிறார். ஆனால் அந்தக் கடிதங்களுக்கும் கூட ஒரு பதிலும் இல்லை, டெல்லியிலிருந்து...
தமிழன் என்று வரும்போது மட்டும் இந்திய அரசுக்கு பேதமே தெரிவதில்லை போலும்.
சாகப் பிறந்தவன் தமிழன்… கேவலம் அவன் உயிருக்காக இலங்கை தூதரகத்தின் பூத்தொட்டி உடைவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க முடியமா!
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications