காந்தி ஜெயந்தி அன்று விடுமுறை வேண்டாம்-தரூர்
டெல்லி: தேசப்பிதா மகாத்மாக காந்தியை கௌரவிக்கும் வகையில் இந்தியர்கள் அவரது பிறந்த நாளன்று விடுமுறை எடுத்து கொள்ளாமல் கூடுதலாக வேலை பார்க்க வேண்டும் என வெளியுறவு துறை இணை அமைச்சர் சசி தரூர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் டுவிட்டரில் அவர் விடுத்துள்ள செய்தி...
மகாத்மா காந்தி அவர்கள் செய்யும் தொழிலே தெய்வம் என கூறியவர். ஆனால் அவரது பிறந்த நாளன்று நாம் வேலை பார்க்காமல் விடுமுறை கொண்டாடுகிறோம்.
அவரும் தனது பிறந்தநாள் தனக்கு கொள்கைகளை எடுத்து கூறுவதாக இருக்க வேண்டும், சாதாதரண சம்பிரதாயமாக மாறக் கூடாது என கூறியிருக்கிறார். அதனால் அவரது பிறந்த நாள் தினத்தில் நாம் கூடுதலாக உழைக்க வேண்டும். அவரது கொள்கைகளை கடைபிடிக்க வேண்டும்.
வியாட்நாமில் அந்நாட்டு விடுதலைக்காக போராடிய ஹோ சி மிங்கின் பிறந்தநாள் தேசிய தினமாக கொண்டாடப்பட்டுள்ளது. அவரை கெளரவிக்கும் வகையில் அன்று வியட்னாமியர்கள் கூடுதலாக உழைக்கின்றனர். அதை அவர்கள் பெருமையாகவும் கருதுகிறார்கள் என்று கூறியுள்ளார் தரூர்.
இந்தக் கருத்தைக் கூறிய கையோடு, எனது இந்தக் கருத்தை யாரும் விமர்சிக்க மாட்டார்கள் என எதிர்பார்க்கிறேன் என்றும் கூறியுள்ளார் தரூர்.
காரணம், அவர் சமீபத்தில் தெரிவித்த விமானங்களில் உள்ள எக்கானமி வகுப்பு மாட்டுத்தொழுவம் என்றும், வேலைப்பளு கேலிகூத்து எனவும் கூறியது பெரும் சர்ச்சைகளை கிளப்பியது என்பது நினைவிருக்கலாம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications