அபுதாபி தமிழ் மகளிர் வட்ட எட்டாம் ஆண்டுவிழா
அபுதாபி: அபுதாபி தமிழ் மகளிர் வட்ட எட்டாம் ஆண்டு விழா வரும் 18ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு அபுதாபி இந்திய சோஷியல் சென்டரில் நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியில் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் மற்றும் நவநீதகிருஷ்ணன் ஆகியோரின் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளும், மறைந்த நடிகர் ஆர்.எஸ். மனோகரின் உறவினர் மீரா ஸ்ரீகாந்த் குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது.
இந்நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கும் நன்கொடை வருவாய், அறப்பணிகளுக்காக செலவிடப்படும் என்று அபுதாபி தமிழ் மகளிர் வட்டம் தெரிவித்துள்ளது.
நிகழ்ச்சிக்கான அனுமதிச் சீட்டுகளை பெற செட்டிநாடு ஹோட்டல் 02 - 6777699, கிருஷ்ணா ஸ்வீட்ஸ் 02 - 678 4799, சௌத் இந்தியன் உணவகம், முஸப்பா 02 - 5522795 மற்றும் 055-8574973 அகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என்றும் அபுதாபி தமிழ் மகளிர் வட்டம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications