மல்டி மீடியா சுய வேலைவாய்ப்பு பயிற்சி- மதுரை காமராஜர் பல்கலை அறிமுகம்
சென்னை: மதுரை பல்கலைக்கழக விரிவாக்கக் கல்வித் துறையில் வரும் ஜனவரி 11ம் தேதி முதல் ஆறு மாத கால மல்டி மீடியா சுய வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக இயக்குனர் ஆர்.முத்துலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மதுரை காமராஜர் பல்கலைக்கழக, வயதுவந்தோர், தொடர் கல்வி மற்றும் விரிவாக்கப் பணித்துறையில் 6 மாத கால மல்டி மீடியா' சுய வேலைவாய்ப்பு சான்றிதழ் பயிற்சி வரும் ஜனவரி 11ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது.
சுயதொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்கள், அலுவலகத்தில் பணிபுரிவோர் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பயிற்சி நடத்தப்பட உள்ளது.
இந்தப் பயிற்சியில் சேர விரும்புவோர் விண்ணப்பத்தை அலுவலகத்தில் பெற்று மாணவர் சேர்க்கையை நேரடியாகப் பதிவு செய்யலாம்.
மதுரையில் அழகர் கோவில் சாலையில் உள்ள மதுரை காமராஜர் பல்கலைக் கழக வயது வந்தோர், தொடர் கல்வி மற்றும் விரிவாக்கப் பணித் துறையில் (பாண்டியன் ஹோட்டல் எதிரில்) மல்டி மீடியா சுய வேலைவாய்ப்பு பயிற்சிக்கான விண்ணப்பப் படிவம் கிடைக்கும்.
இங்கு பயிற்சியும் அளிக்கப்படுகிறது. 12ம் வகுப்பு முதல் பட்டயப் படிப்பு வரை படித்தவர்கள் இந்த பயிற்சியில் சேரலாம். 20 மாணவ, மாணவிகளே சேர்க்கப்பட உள்ளதால் முதலில் வருபவருக்கே முன்னுரிமை அளிக்கப்படும்.
வெளியூர் மாணவ, மாணவிகள் விண்ணப்பப் படிவம் பெறுவதற்கு ரூ.50க்கான தொகையை மணியார்டர் மூலம் மேற்குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மணியார்டர் ஃபாரத்தில் தெளிவான வீட்டு முகவரி மற்றும் மல்டிமீடியா பயிற்சி விண்ணப்பம் என்பதை குறிப்பிட வேண்டும். சுயவிலாசமிட்ட ரூ.5க்கான தபால்தலை ஒட்டிய அலுவலக கவரில் மல்டிமீடியா பயிற்சி விண்ணப்பம் பெற என்று குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.












Click it and Unblock the Notifications