புதுச்சேரியில் 100 வயதானோருக்கு 1 பவுன் தங்கம்
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் நூறு வயது நிரம்பியவர்களுக்கு தலா ஒரு பவுன் தங்கக்காசு வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
புதுச்சேரி மூத்த குடிமக்கள் நலவாழ்வு சங்கத்தின் 11ம் ஆண்டு துவக்க விழா, லாஸ்பேட்டையில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் கவர்னர் இக்பால்சிங் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில்,
'மூத்தோர்களுக்கு மரியாதை கொடுக்கும் பண்பாடு நம்நாட்டில் உள்ளது. கலாச்சார படி நாம் வாழ்ந்து வருவதால் இந்திய குடும்பங்கள் ஒவ்வொன்றும் வலிமை மிக்கதாகவும், பாதுகாப்பு உள்ளதாகவும் உள்ளது.
மூத்த குடிமக்கள் குடும்பம் மற்றும் சமுதாய நலனுக்காக கடுமையாக உழைத்துள்ளனர். அவர்களிடமிருந்து தற்போதைய சந்ததியினர் அறிவையும், அனுபவத்தையும் பெற்றுக் கொள்ள முடியும்.
புதுவை அரசு மற்றும் மத்திய அரசு மூத்த குடிமக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. புதுவை அரசு மூத்த குடிமக்களுக்கு பென்ஷன் தொகையாக 54 ஆயிரத்து 350 பேருக்க தலா ரூ.600 வீதம் மாதந்தோறும் வழங்கி வருகிறது.
போலீஸ் துறை சார்பில் துவங்கப்பட்டுள்ள இணையதளத்தில் மூத்த குடிமக்கள் தங்கள் விவரங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். அப்போது தான் தனியாக உள்ள மூத்த குடிமக்கள் பற்றிய விவரங்களை கண்டறிய முடியும்.
100 வயது நிரம்பிய மூத்த குடிமக்களுக்கு அரசு சார்பில் தலா ஒரு பவுன் தங்கக்காசு வழங்கப்படும். இதற்கான விழா விரைவில் நடத்தப்படும்' என்று இக்பால் சிங் கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications