ஜப்பானிய மொழிப்பயிற்சி மையம் புதுச்சேரியில் திறப்பு
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: புதுச்சேரியில் ஜப்பான் மொழி மற்றும் கலாச்சார மேலாண்மை பயிற்சி நிறுவனம் துவக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் துணை தூதர் டகாயுகி கிடாகவா இந்நிறுவனத்தை துவக்கி வைத்தார். துவக்க விழாவில் அவர் பேசுகையி்ல், 'ஜப்பான் மொழியை படிப்பதற்கு குறிப்பாக தமிழர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்.
கடந்தாண்டு ஜப்பான் மொழி திறனறிதல் போட்டியில் தமிழகத்தில் 1873 பதிவு செய்திருந்தனர். இந்தாண்டு இந்த எண்ணிக்கை 2260 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் ஜப்பான் நிறுவனங்களின் எண்ணிக்கை 2006ல் 328ஆக இருந்தது. தற்போது 1049 ஜப்பான் நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளன.
இந்தியாவில் ஜப்பான் மொழியை படித்துவரும் மாணவர்களின் எண்ணிக்கை 2007ல் 5,000மாக இருந்தது. தற்போது 10,000மாக அதிகரித்துள்ளது' என்றார்.












Click it and Unblock the Notifications