ஊத்தங்கரை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தமிழ் இணைய அறிமுகப் பயிற்சி
Subscribe to Oneindia Tamil
கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இன்று தமிழ் இணைய அறிமுகப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் இரண்டு மணிமுதல் நான்கு மணிவரை தமிழ் இணையம் அறிமுகமும் இணையப் பயிற்சியும் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அருகில் உள்ள பதிவர்கள்,தமிழ் இணைய ஆர்வலர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கலாம். அண்மையில் தமிழ்நாட்டு அரசு இந்தப் பள்ளியில் கணிப்பொறித் துறைக்கான மிகச்சிறந்த ஆய்வுக்கூட வசதியை ஏற்படுத்தித் தந்துள்ளது. இந்த நிகழ்வு அதில் நடைபெறும் முதல் நிகழ்வாகும்.
இந்தப் பயிற்சியில் புதுச்சேரியிலிருந்து பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன் பங்கேற்று மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கிறார்.












Click it and Unblock the Notifications