பெண்கள் உண்ணாவிரதம் 13வது நாளாக நீடிப்பு

இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி ஈழத்தமிழர் படுகொலைக்கு எதிரான பெண்கள் அமைப்பை சேர்ந்த 20 பெண்கள் மதிமுக தலைமை அலுவலகமாக தாயகத்தில் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் உடல் நிலை பாதிக்கப்பட்ட 5 பெண்களை போலீசார் கைது செய்து சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆனால், மிச்சமுள்ள 15 பெண்களும் உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகின்றனர். இவர்களது போராட்டம் இன்று 13வது நாளை எட்டியது. இந்தப் பெண்கள் மிகவும் சோர்வுடன் காணப்படுகின்றனர். எழக் கூட முடியாமல் படுத்தபடியே உள்ளனர். இவர்களது உடல் நிலையை அவ்வப்போது டாக்டர்கள் பரிசோதித்து வருகின்றனர்.
போராட்டத்திற்கு தலைமை தாங்கும் பேராசிரியை சரஸ்வதி, மற்றும் பாண்டிமா தேவி, பழனியம்மாள், லிட்வி மேரி, பிலோமினா, பொன்னுத்தாய் ஆகியோரின் உடல்நிலை மோசமாக இருப்பதாக தெரியவந்ததால் ஆம்புலன்சும் அங்கு நிறுத்தப்பட்டுள்ளது.
போராட்டத்தை கைவிடுமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோள் நிராகரித்துவிட்ட இவர்கள் அவ்வப்போது தண்ணீர் மட்டுமே குடித்து வருகின்றனர்.
இந் நிலையில் சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த ராஜ், குமார் ஆகிய வாலிபர்கள் தாயகத்திற்கு வந்தனர். அவர்கள் இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும், இந்திய அரசை கண்டித்தும் திடீரென்று மொட்டையடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் தலை முடியை கத்திரிக்கோலால் வெட்டி வீசினர்.
போராட்டத்தை கைவிட ஜெ. கோரிக்கை:
இதற்கிடையே அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பெண்களே முன் நின்று நடத்தும் இந்த உணர்வுப் போராட்டத்தின் வலியை, பெண்ணாகிய நானும் உணர்வேன். என் அன்புச் சகோதரர் மணி உள்பட ஈழத்தமிழர்களுக்காக தங்கள் இன்னுயிரை 14 தமிழர்கள் மாய்த்துக் கொண்டும், கருணாநிதி போர் நிறுத்தத்திற்கு தேவையான எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
இலங்கைத் தமிழர்களுக்காக உடலை வருத்திக் கொண்டு உண்ணாவிரதம் இருப்பதை தவிர்த்து, பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு நம்மால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும். இதுதான் இப்போதைய முக்கியத் தேவை. எனவே, உண்ணாவிரதம் இருந்து வரும் பெண்கள் அனைவரும் தங்களுடைய உண்ணாவிரத அறப்போராட்டத்தை உடனடியாக முடித்துக் கொள்ள வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications