ராமேஸ்வரம் கோயிலில் தீர்த்த கிணறுகள் திடீர் மூடல் - பக்தர்கள் கடும் எதிர்ப்பு

இந்தியாவில் புகழ் பெற்ற ஆன்மீக ஸ்தலம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில், இதனால் இந்த கோயிலுக்கு தமிழகம் மட்டும் இன்றி வெளி மாநிலங்களில் இருந்தும் தினசரி பல நூறு பக்தர்கள் வந்த வணம் உள்ளனர்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள் பூஜை செய்து, அக்னி தீர்த்தக் கடலில் நீராடிய பின்னர், கோயிலுக்குள் சென்று அங்கிருக்கும் 22 புனிதத் தீர்த்தங்களிலும் நீராடுவது வழக்கம்.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அமாவாசை என்பதால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்தனர்.
அப்போது, பக்தர்கள் அக்னி தீர்த்தக் கடலில் நீராடிவிட்டு, கோயிலுக்குள் 22 தீர்த்தங்களிலும் நீராட சென்றனர்.
அப்போது, 2 முதல் 6 வரை உள்ள சாவித்ரி, காயத்ரி, சரஸ்வதி, சங்கு, சக்கரம் ஆகிய 5 தீர்த்தக் கிணறுகள் மூடப்பட்டிருந்தன.
இதனால் அந்த தீர்த்த கிணறுகளில் பக்தர்களால் நீராட முடியவில்லை. மற்ற 17 தீர்த்தங்களில் மட்டுமே நீராட அனுமதிக்கப்பட்டனர். இதனால் பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
கோயில் நிர்வாகத்தின் இந்த செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தோடு, கோயில் நிர்வாகத்தினரிடம் கடும் வாக்கு வாதம் செய்தனர்.
இது குறித்து கோயில் அதிகாரி செய்தியாளர்களிடம் கூறுகையில், தற்போது, விடுமுறை காலம் என்பதால், பக்தர்களின் கூட்டம் அதிகமாக உள்ளது.
இதனால், குறிப்பிட்ட 5 தீர்த்தக் கிணறுகளில் பக்தர்கள் நீராடிவிட்டு திரும்புவதில் சிரமம் ஏற்பட்டது. எனவே தான், அந்த கிணறுகளை மூடி வைத்தோம். இனிவரும் காலங்களில் கூட்டத்தைச் சமாளிக்க மாற்று ஏற்பாடு செய்யப்படும் என்றார்.
-
திருப்பதியில் மகா விசித்திரம்! சாமி சிலையில் ரத்தம் வடியுதா? கலியுக பேரழிவின் முடிவா? பக்தர்கள் பீதி -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications