வால்ட் டிஸ்னியின் ஹங்கமா டிவி தொடக்கம்

தனது ஹங்கமா டிவியின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி சேனலை தொடங்கியுள்ளது வால்ட் டிஸ்னி நிறுவனம்.
இது ஒரு கட்டணச் சேனலாகும். முற்றிலும் சிறார்களுக்கானது. 4 முதல் 14 வயது வரையிலான சிறார்களுக்கான நிகழ்ச்சிகள் இதில் இடம் பெறுமாம்.
இதுகுறித்து நிறுவனத்தின் உதவி மார்க்கெட்டிங் இயக்குநர் வேணுகோபால அய்யங்கார் கூறுகையில், ஹங்கமா டிவி ஒரு கட்டணச் சேனல். 4 முதல் 14 வயது வரையிலான சிறார்களுக்கானது.
ஹங்கமா டிவியின் டாப் ஐந்து நிகழ்ச்சிகளில் டோராமோன், ஷின் சான், கைட்ரெட்சு ஆகிய முக்கிய மூன்று நிகழ்ச்சிகள் இதில் அடக்கம்.
ஏற்கனவே டிஸ்னி எக்ஸ்டி, டிஸ்னி ஆகிய இரு சானல்கள் உள்ளன. தற்போது ஹங்கமா டிவி இந்த வரிசையில் இணைந்துள்ளது என்றார்.
ஏற்கனவே தமிழில் சுட்டி டிவி, சிறார்களுக்காக வந்து கொண்டுள்ளது. அதேபோல தெலுங்கில் குஷி என்ற சிறார்களுக்கான டிவி உள்ளது. இரண்டுமே சன் குழுமத்தைச் சேர்ந்தவையாகும். இதுதவிர போகோ டிவியும் குட்டீஸ்களுக்காக உள்ளது. தற்போது புதிதாக ஹங்கமாவும் இணைந்துள்ளது.
அய்யங்கார் தொடர்ந்து கூறுகையில், தமிழ்நாடும், ஆந்திராவும் தனியார் சாட்டிலைட் சானல்கள் களத்தில் மிக முக்கியமான களங்களாகும். இங்கு டிவி பார்ப்போரின் எண்ணிக்கை மிக மிக அதிகம். இதை நாங்கள் தவற விட விரும்பவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications