குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் புனித ரமலான் வரவேற்பு நிகழ்ச்சிகள்
குவைத்: புனித ரமலான் மாத வருகையையொட்டி 'குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)' ஏற்பாடு செய்யும் 'புனித ரமலான் வரவேற்பு சிறப்பு நிகழ்ச்சிகள்' நான்கு இடங்களில் இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக நடக்கவுள்ளது. இந்த நிகழ்ச்சிகள் குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம் மற்றும் மஸ்ஜிதுல் கபீரின் நிர்வாகத்தின் ஆதரவில் நடைபெறுகின்றன.
முதல் நாள் நிகழ்ச்சி:
வரும் 5-ம் தேதி மாலை 6:30 மணி முதல் மக்ரிப் தொழுகையை தொடர்ந்து குவைத் ஃபஹாஹீல், கத்ஆ 7, பகுதியில் உள்ள 'மஜீத் அல் ஹிலால் அல் உதைபீ (உர்தூ குத்பா) பள்ளி' பள்ளிவாசலில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும். இதில் சங்கத்தின் துணைத் தலைவர் மவ்லவீ ஹாபிஃழ் காரீ அல்ஹாஜ் அஷ்ஷைக் எம். முஹம்மது நிஜாமுத்தீன் பாகவீ மற்றும் செயலாளர் (ஜமாஅத்துல் உலமா / மார்க்க அறிஞர்கள் குழு) மவ்லவீ ஹாஃபிழ் காரீ அல்ஹாஜ் அஷ்ஷைஃக் எம்.டி.எம். அஜ்வத் ரைவின்தி லாஹூரி (இலங்கை) ஆகியோர் புனித ரமலான் குறித்த தலைப்புகளில் சிறப்புரையாற்றுகின்றனர்.
இரண்டாம் நாள் நிகழ்ச்சி:
வரும் 6-ம் தேதி இரவு 8:00 மணி முதல் இஷா தொழுகையை தொடர்ந்து குவைத் சிட்டி, மிர்காப் பகுதியில் உள்ள அல்-ஷாயா மஸ்ஜித் (உர்தூ குத்பா பள்ளி - KPTC பேரூந்து நிலையம் / லிபரேஷன் டவர் அருகில், சூக்குல் வதனிய்யா எதிரில்) பள்ளிவாசலில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
இதில் சங்கத்தின் துணைத் தலைவர் மவ்லவி காரீ அஷ்ஷைஃக் எம். ஜைனுல் ஆபிதீன் பாகவீ மற்றும் பொதுச் செயலாளர் மவ்லவீ அஃப்ழலுல் உலமா அல்ஹாஜ் அஷ்ஷைக் அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ எம்.ஏ., ஆகியோர் புனித ரமலான் பற்றி சிறப்புரையாற்ற இருக்கின்றனர்.
சங்கத்தின் தலைவர் மவ்லவீ அஷ்ஷைஃக் எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ ஹழ்ரத் அவர்கள் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சிகளில் இஸ்லாமிய பொது அறிவுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெறுவோருக்கு பரிசுகள் வழங்கப்படும். இவ்வருடத்திற்கான புனித ரமலான் (ஹிஜ்ரீ 1430 / ஈஸவீ 2010) நோன்பு கால அட்டவணையும் வெளியிடப்படும். பெண்களுக்கு தனியிட வசதியும், நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் சிற்றுண்டியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மூன்றாவது நிகழ்ச்சி:
வரும் 6-ம் தேதி ஜும்ஆ தொழுகைக்கு பிறகு குவைத், ஹவல்லி பகுதியில் உள்ள 'அஷ்-ஷைக்கா ஸபீக்கா' பள்ளிவாசலில் சங்கத்தின் துணைத் தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் காரீ அஷ்ஷைஃக் ஏ.ஆர். முஹம்மது இப்ராஹீம் மன்பயீ புனித ரமலான் குறித்து சிறப்புறையாற்றுகிறார்.
கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக 200 வாரங்களை கடந்து இப்பள்ளிவாசலில் ஒவ்வொரு வாரமும் ஜும்ஆ தொழுகைக்கு பிறகு தமிழ் இஸ்லாமிய ஆலிம்களைக் கொண்டு சங்கத்தின் சார்பாக தமிழ் மொழியில் நபிமொழி (ஹதீஸ்) வகுப்புகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
நான்காவது நிகழ்ச்சி:
வரும் 6-ம் தேதி ஜும்ஆ தொழுகைக்கு பிறகு குவைத், அப்பாஸிய்யா பகுதியில் உள்ள 'அல்-அன்பயீ' பள்ளிவாசலில் நடைபெறும் நிகழ்ச்சியில் சங்கத்தின் துணைத் தலைவர் மவ்லவி காரீ அஷ்ஷைஃக் எம். ஜைனுல் ஆபிதீன் பாகவீ புனித ரமலான் குறித்து சிறப்புறையாற்றவுள்ளார்.
இந்த பள்ளிவாசலிலும் கடந்த ஓராண்டாக ஒவ்வொரு வாரமும் ஜும்ஆ தொழுகைக்கு பிறகு தமிழ் இஸ்லாமிய ஆலிம்களைக் கொண்டு சங்கத்தின் சார்பாக தமிழ் மொழியில் நபிமொழி (ஹதீஸ்) வகுப்புகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
மேற்கண்ட நான்கு நிகழ்ச்சிகளிலும் குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம் மற்றும் திருக்குர்ஆன் விவகாரங்கள் துறை நிர்வாகம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் 'குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)' ஏற்பாடு செய்திருக்கும் திருக்குர்ஆன் பயிற்சி வகுப்பின் விண்ணப்பப் படிவங்கள் விநியோகம் செய்யப்படும். துஆவுடன் இன்ஷா அல்லாஹ் இனிதே நிகழ்ச்சிகள் நிறைவுபெறும்.
இச்சிறப்புமிகு நிகழ்வுகளில் குவைத் வாழ் தமிழ் முஸ்லிம்கள் அனைவரும் தங்கள் உற்றார், உறவினர்களுடன் பங்கேற்று பயனடையுமாறு அழைக்கப்படுகின்றனர்.
மேலதிக விபரங்களுக்கு...
துரித சேவை அலைபேசி எண்: (+965) 97 87 24 82
இணையதளம்: www.k-tic.com
மின்னஞ்சல் முகவரிகள்: [email protected]/ [email protected]
யாஹு குழுமம்: http://groups.yahoo.com/group/K-Tic-group












Click it and Unblock the Notifications