வளைகுடாவிலும் முத்திரை பதிக்கும் தமிழ் சகோதர-சகோதரிகள்

Subscribe to Oneindia Tamil

ரியாத்: ரியாத்தில் மிகப் பெரிய அளவில் ரத்த தான முகாமை நடத்தியுள்ளது தவ்ஹீத் ஜமாத் அமைப்பு.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பானது தமிழகத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உதவிகள் செய்து வருவதோடு மட்டுமல்லாமல் உலகெங்கிலும் தனது உறுப்பினர்களைக் கொண்டு பல்வேறு உதவிகளை செய்து வருகின்றது.

குறிப்பாக வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு தேவைப்படும் உதவிகளை செய்து வருகின்றது. சவூதி அரேபியாவில் உள்ள பல மருத்துவமனைகளுக்கு இரத்தம் தேவைப்படும் போதெல்லாம் மருத்துவமனை அதிகாரிகள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை அணுகுவதால் அது அடிக்கடி மெகா ரத்ததான முகாம்களை நடத்தி வருகின்றது.

30-07-2010 வெள்ளிக்கிழமையன்று கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டியில் (KFMC) நடந்த ரத்ததான முகாமில் பெண்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதில் 221 பேரிடம் இரத்தம் பெறப்பட்டது. இது ரியாத் மண்டலம் நடத்தும் 9-வது ரத்ததான முகாமாகும்.

சவூதி அரேபியாவிலேயே ஒரே நாளில் அதிகமானோர் ரத்தம் வழங்கிய முகாம் இது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தமிழ் பேசும் நண்பர்கள் நடத்திய இந்த முகாமை சவூதி அரேபியர்கள் வியப்புடன் பார்த்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+