சூலமங்கலம் சகோதரிகளில் ஒருவரான சரஸ்வதி மரணம்
சென்னை: கந்தசஷ்டி கவசம் பாடிய சூலமங்கலம் சகோதரிகள் எனப்படும் ஜெயலட்சுமி - ராஜலட்சுமி ஆகியோரின், இன்னொரு சகோதரியும் பரத நாட்டியக் கலைஞருமான சரஸ்வதி நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 68. புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் சரஸ்வதி.
கந்தசஷ்டி கவசம் தவிர, அபிராமி அந்தாதி மற்றும் சினிமாவிலும் சில பாடல்களைப் பாடியுள்ளவர்கள் சூலமங்கலம் சகோதரிகள். இசைவளர்த்த நங்கையர்கள் என்று போற்றப்பட்டவர்கள். இவர்களில் ஒருவரான ராஜலட்சுமி கடந்த 1992-ம் ஆண்டு மரணம் அடைந்து விட்டார்.
சரஸ்வதி, கடந்த 2 வருடங்களாக புற்று நோயால் அவதிப்பட்டு வந்தார். அவர் உடல்நிலை மோசம் அடைந்ததை தொடர்ந்து சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல், நேற்று பிற்பகல் 2-30 மணிக்கு மரணம் அடைந்தார். அவருடைய உடலைப் பார்த்து மூத்த சகோதரி ஜெயலட்சுமி கதறி அழுதார்.
மரணம் அடைந்த சரஸ்வதியின் உடல் தகனம், சென்னை பெசன்ட் நகரில் உள்ள மின்சார மயானத்தில், இன்று நடக்கிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications