வள்ளியூர் அருகே 1000 ஆண்டுகள் பழமையான கோயில் கண்டுபிடிப்பு
வள்ளியூர்: வள்ளியூர் அருகே ராஜாக்கமங்கலம் ஊராட்சியில் நம்பியாறை ஓட்டிய கிராமங்களில் 1000 ஆண்டுகள் பழமையான ஒரு கோயிலை அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். அதிலிருந்து 56 சிலைகளை தோண்டு எடுத்துள்ளனர்.
இரணியன் என்ற அரசன் ஆட்சி செய்த பகுதிதான் இரணியன் படுகளம். இது காலப்போக்கில் இரணியன் குடியிருப்பு என மாறிவிட்டது. இங்கு பாண்டியர் காலத்தை சேர்ந்த பல சிலைகள் ஊருக்குள், ஆற்று படுகைக்குள்ளும் சிதிலமடைந்து ஆங்காங்கே கிடந்தன.
இந்த பகுதியி்ல் தமிழக தொல்லியல் துறையினர் கடந்த 2 மாதங்களாக அகழ்வராய்ச்சி செய்து வருகின்றனர். தற்போது இந்த பகுதியில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில் இருந்ததற்கான ஆதாரங்கள் தெரிய வந்துள்ளன. இதுவரை இந்த பகுதியில் இருந்து 56 சிலைகள் கிடைக்கப் பெற்றுள்ளன. எனவே இந்த பகுதியில் பெரிய சிற்ப கூடமோ, அல்லது பெரிய கோயிலோ இருந்திருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
இந்த பகுதிகள் நம்பியாற்று படுகையில் உள்ளதால் பெரிய வணிக தளமாக இருந்திருக்ககூடும் எனவும், தமிழர்களின் பண்பாடு மட்டுமின்றி அவர்களின் வணிகம் சார்ந்த பல வரலாறுகள் ஆராய்ச்சியில் தெரிய வரும் என்கின்றனர்.
இங்கு பெரிய நரசிம்மர் சிலை, முருகன் சிலை, தாய்மார் எழுவர் என பல சிலைகள் கிடைத்துள்ளன. இங்கு கோள்கள் பற்றியும், ஜோதிடம் சார்ந்த சிலைகளும் காணப்படுகின்றன. இவைகளில் வட்ட எழுத்துகள் பல உள்ளன. இந்த சிலைகள், 8ம், 9ம் நூற்றாண்டை சேர்ந்தவையாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications