ஓணத்திற்காக மூடப்படும் நாடாளுமன்றம்!: பொங்கலுக்கும் மூடுவார்களா?

பல்வேறு கலாச்சாரம், பாரம்பரியம், திருவிழாக்களைக் கொண்ட நாடு இந்தியா. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு விசேஷமான பண்டிகை இருக்கும். பொதுவான பண்டிகைகளாக தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் ஆகியவை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இவை தவிர தமிழர்கள் பொங்கல் பண்டிகையையும், மலையாளிகள் ஓணத்தையும், தெலுங்கர்கள் மற்றும் கன்னடனர்கள் உகாதி பண்டிகையையும் சிறப்பாக கொண்டாடுகின்றனர். இதுபோல வடக்கிலும், இந்தியாவின் இதர பகுதிகளிலும் அப்பகுதிக்கே உரிய சிறப்புப் பண்டிகைகளும் உள்ளன.
ஆனால் இந்த பண்டிகை எதற்காகவும் இதுவரை நாடாளுமன்றத்திற்கு விடுமுறை விடப்பட்டதில்லை. ஆனால் முதல் முறையாக மலையாளிகள் மட்டும் கொண்டாடும் ஓணம் பண்டிக்கைக்காக வருகிற 23ம் தேதி நாடாளுமன்றத்திற்கு விடுமுறை விட்டுள்ளனராம்.
அனைத்து இந்தியர்களுக்கும் பொதுவானதுதான் இந்திய அரசு. இந்திய நாடாளுமன்றம் அனைத்து இந்தியர்களுக்கும் பொதுவானது. அப்படி இருக்கையில், ஓணம் பண்டிக்கைக்கு மட்டும் விடுமுறை விட்டு நாடாளுமன்றத்தை மூடுவது இதுவரை காணாத ஒரு அதிசயச் செயலாக கருதப்படுகிறது.
இதுவரை நாடாளுமன்றத்தை ஒரு பிராந்தியப் பண்டிக்கைகாக விடுமுறை விட்டு மூடியதாக வரலாறு இல்லை. ஆனால் டெல்லியில் உள்ள மலையாள லாபியினரின் கடும் முயற்சியின் காரணமாக இது சாத்தியமாகியுள்ளது, சாத்தியமாக்கியுள்ளது காங்கிரஸ் கூட்டணி அரசு என்று கூறப்படுகிறது.
ஓணம் பண்டிக்கைகாக நாடாளுமன்றத்திற்கு விடுமுறை விடுவது போல தமிழர்களின் பண்டிகையான பொங்கல், தெலுங்கர்கள், கன்னடர்களின் உகாதி ஆகியவற்றுக்காகவும் நாடாளுமன்றத்திற்கு விடுமுறை அறிவித்து மூடுவர்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications