சத்தியமங்கலம் அருகே ரூ. 5 லட்சம் மதிப்புள்ள திப்பு சுல்தான் காலத்து தங்க நாணயங்கள் கண்டெடுப்பு
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே பூமியல் இருந்து கண்டெடுக்கப்பட்ட தங்க நாணய புதயல் ஈரோடு மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம், சத்தி தாலுகா கோட்டமாளம் பகுதியை சேர்ந்தவர் மாதி. இவரது பேத்தி வினிதா கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு வீட்டை சுற்றியுள்ள செடி கொடிகளை சுத்தம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது மண்ணின் அடியில் இருந்து மண் குடுவை ஒன்று தெரிந்துள்ளது. அதை எடுத்து பார்த்த போது, அதில் நிறைய தங்க நாணயங்கள் இருந்தது.
இந்த தகவல் காட்டுத் தீ போல் அக்கம் பக்கத்தில் பரவியதால், அப்பகுதி மக்கள் தங்க நாணயத்தை பார்க்க படையெடுத்து வந்தனர்.
தகவல் அறிந்த சத்தியமங்கலம் தாசில்தார் சண்முகம் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு விசாரணை நடத்தி, புதையலில் இருந்த 400 மில்லி கிராம் எடை கொண்ட சுமார் 744 வட்ட வடிவிலான தங்க நாணயங்களை பறிமுதல் செய்தனர்.
இந்த நாணயத்தின் ஒரு பக்கத்தில் கொடி உருவமும் மற்றொரு பக்கத்தில் எட்டு சிறிய புள்ளிகளும், இரு பெரிய புள்ளிகளும், இரு அரை வட்ட நிலா தோற்றமும் இருந்தது. இதன் மதிப்பு ரூ. 5 லட்சம். இவை திப்பு சுல்தான் காலத்து நாணயங்கள் எனக் கருதப்படுகிறது.
இதையடுத்து இந்த காசுகள் மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைக்கப்பட்டது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications