குற்றாலம் குற்றாலநாதசாமி கோவிலில் கோலாகல கும்பாபிஷேகம்
குற்றாலம் திருக்குற்றாலநாதசாமி கோவில் நூற்றாண்டு பழமை வாய்ந்த சைவ சமய பெரியோர்களால் பாடப்பட்ட திருத்தலம் ஆகும். தமிழகத்தில் உள்ள பஞ்ச சபைகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சித்திரசபை இங்கு தான் உள்ளது.
சிறப்பு மிக்க இக்கோவிலில் திருப்பணி குழு, அறங்காவலர் குழு, உபயதாரர்கள் அரசின் உதவியுடன் ரூ. 1 கோடி செலவில் திருப்பணிகள் செய்தனர்.
இதையடுத்து இன்று காலை குழல்வாய்மொழி அம்மன் உடனுறை குற்றாலநாதசாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இன்று காலை 6 மணிக்கு யாகசாலை பூஜை, நாடி சந்தானத்தை தொடர்ந்து காலை 8 மணிக்கு கடம் எழுந்தருள் நடைபெற்றது. பின்னர் சித்திர சபை விமானம் மற்றும் மூலஸ்தானத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து குற்றாலநாதசாமி மற்றும் குழல்வாய்மொழி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தேறியது.
இன்று மதியம் அன்னதானம் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 7 மணிக்கு திருக்கல்யாணம், பஞ்ச மூர்த்திகள் வீதியுலா நடக்கிறது.
அமைச்சர் வரவில்லை:
கும்பாபிஷேகத்திற்கு இந்து அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன் வருகை தருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து தென்காசியிலிருந்து குற்றாலம் வரும் வழி நெடுகிலும் பெருமளவில் போஸ்டர்கள் அடித்து ஒட்டப்பட்டு தடபுடலான வரவேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இருப்பினும் பெரியகருப்பன் கடைசி வரை வரவே இல்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications