திருப்பாவை
திருப்பாவை
30. வங்கக்கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத்
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப்பறை கொண்டவாற்றை அணிபுதுவைப்
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்கிப் பரிசுரைப்பார்ரீரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள்பெற்றின் இன்புறுவர் எம்பாவாய்.
பொருள்: வங்கக் கடலைக் கடைந்து அமுதம் எடுத்த மாதவனை, கேசவனிடம், நிலவைப் போன்ற முகம் கொண்ட சேயிழைப் பெண்கள் சென்று, வணங்கி, ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்த அன்றலர்ந்த தாமரை போன்ற முகத்தினை உடைய ஆண்டாள் நாச்சியார் அருளிச் செய்த சங்கத் தமிழ் மாலையாகிய இந்த முப்பது திருப்பாவைப் பாடல்களையும் தப்பாமல் கற்பவர்கள், மாபெரும் மலைகளைப் போன்ற தோள்களை உடைய, செங்கண் திருமுகத்தைக் கொண்ட அந்த திருமாலாலின் நல்லருள் பெற்று பெருமகிழ்ச்சி அடைவார்கள்.
திருப்பள்ளியெழுச்சி
10. புவனியிப் போய் பிறவாமையில் நாள் நாம்
போக்குகின்றோம் அவமே இந்தபூமி
சிவன் உய்ய கொள்கின்ற வரென்று நோக்கித்
திருப்பெரும் துறை உறைவாய் திருமாலாம்
அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசை,
படவும் நின் அலர்ந்த மெய்க்கருணையும் நீயும்
அவனியிர் புகுந்து எம்மையும் ஆட்கொள்ள வல்லாய்
ஆரமுதே பள்ளி எழுந்தருள்வாயே.
பொருள்: சிவபெருமான விண்ணுலகிலிருந்து பூமிக்கு வந்து விட்டான். நம் அனைவரையும் மண்ணுலகிலேயே வாழ வழியும் செய்து விட்டான். அவனுடைய அருள் கிடைக்க வேண்டும் என்றால், பெற வேண்டும் என்றால் பூமியில்தான் போய் பிறக்க வேண்டும். மண்ணுலகில் போய் பிறக்காமல் விட்டு விட்டோம் என்று பேசிய திருமால், பிரம்மனின் விருப்பம் நிறைவேற நீ அருள் புரிய வேண்டும்.
திருப்பெருந்துறையில் உறைந்துள்ள சிவபெருமானே, விண்ணுலகத்தோர் பூமிக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். எங்களை மட்டும் அல்லாமல் அவர்களையும் காப்போமாக. எங்களைக் காக்க பூமியில் அவதரித்து இங்கேயே நிலை பெற்று விட்டீர்கள். அப்படிப்பட்ட பெருமானே கருணை நாயகனே எங்களுக்காக பள்ளி எழுந்தருளாயே.












Click it and Unblock the Notifications